சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடைகோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டத்தை தொடர்ந்து டெல்லி சென்ற பள்ளிகல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழ்நாடு இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டது.
மனுவை படிக்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை விசாரணை செய்யப்படும் என்று நீதிபதிகள் பி.எஸ்.செளகான், சுதந்திரகுமார் அறிவித்துள்ளனர்.
இதனிடையே தமிழக அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து கடலூரை சேர்ந்த மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வெங்கடேஷ், மனித உரிமை பாதுகாப்பு மைய சென்னை சங்கத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
சமச்சீர் வழக்கில் தங்களையும் விசாரிக்க வேண்டும் என்று மனுவில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக