சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், தி.மு.க., கொடியின் நிறத்தை போல கறுப்பு, சிவப்பு நிறத்துடன் சட்ட காந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. படத்தை, ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மே மாதம் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு சமச்சீர் கல்விக்கு தடை விதித்தது. இந்நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நடப்பாண்டில், ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்களில், சில பகுதிகளை நீக்கியும், ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வெளியிட தமிழக அரசு முடிவு செய்தது. சில நாட்களாக கல்வித்துறை அறிவுரைபடி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மறைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், 81ம் பக்கத்தில் தி.மு.க.,வின் கறுப்பு, சிவப்பு வர்ண கொடியை மாணவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், கறுப்பு - சிவப்பு நிறத்துடன் கூடிய சட்டகாந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. அதனால், அந்த படத்தையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அறிவியல் பாடத்தில் சட்டகாந்தம் படத்தை ஆசிரியர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக