வகங்கை : தேர்தல் பணியில் ஈடுபட்ட நில அளவைத்துறையினருக்கு தேர்தலுக்கான மதிப்பூதியம் வழங்கப்படாமல் கமிஷன் பாரபட்சம் காட்டுவதாக பணியாளர்கள் குமுறுகின்றனர்.
தேர்தல் கமிஷன் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை அரசு ஊழியர்கள், மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களை கொண்டு நடத்தியது. இதில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியது. இப்பணிக்கு அனைவருக்கும் மதிப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட நில அளவைத்துறை பணியாளர்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது. தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் ஆனநிலையில் இவர்களுக்கு மதிப்பூதியம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
நில அளவை துறை பெண் ஊழியர் ஒருவர் கூறுகையில்,"" மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் வீடியோ கண்காணிப்பு குழுவில் கடந்த ஏப்ரல் 13 முதல் மே 13 வரை வார விடுமுறைகூட எடுக்காமல் தொடர் பணியில் ஈடுபட்டோம். தேர்தல் பணியில்ஈடுபட்ட மற்ற பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டு விட்டது. நில அளவைத்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் நில அளவைத்துறை பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பூதியத்தை கிடைக்கவிடாமல் தடுக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் அரசுபணியில் ஈடுபட்டதற்கு எதற்கு மதிப்பூதியம் என கேட்கின்றனர். பணம் வந்தால் தருகிறோம் என பொறுப்பில்லாமல் பதில் சொல்கின்றனர். தேர்தல் பணியில் ஈடுபட்டதில் கமிஷன் பாரபட்சம் காட்டுகிறது,'' என்றார்.
தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில்,"" தேர்தல் கமிஷன் குறைந்த தொகையையே இப்பணிக்கு வழங்கியது. பணியில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தல் கமிஷனின் ஆலோசனைப்படி பணப்பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. மற்றவர்களுக்கு தேர்தல் கமிஷன் பணம் வழங்கினால் தரப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக