டெல்லி சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தால், எங்களைக் கேட்டு விட்டுத்தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டம் நடப்பாண்டிலும் தொடர வேண்டும் என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இன்று அல்லது நாளைக்குள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படவுள்ளது. இதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி போயுள்ளார்.
இந்த நிலையில் அந்த மனு மீது தங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கோரி சமச்சீர் கல்வி கோரும் மனுதாரர் சுரேஷ் உள்ளிட்டோர் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் தமிழக அரசு அப்பீல் செய்தால், இவர்களது கருத்துக்களையும் கேட்ட பின்னரே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக