நடப்பு ஆண்டில் உயர்நிலைப்பள்ளிகளை தரம் உயர்த்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் 100 நடுநிலைப்பள்ளிகள், 100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கான பணிகள் ஜூன் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் அறிவிக்கப்படும்.
நடப்பு ஆண்டில், சமச்சீர் கல்வி தொடர்பான பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்தி வருவதால், பள்ளிகளின் தரம் உயர்வு குறித்து இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால், புதிதாக நியமனம் செய்ய வேண்டிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இதுவரை நடக்கவில்லை. இதனால், மேல்நிலைப்பள்ளிகளில் 300 தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளிகளில் 400 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக