கடலூர் : கோர்ட் உத்தரவுப்படி சமச்சீர் கல்வி உடனடியாக அமலுக்கு வந்துள்ளதையடுத்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால் பள்ளிகளுக்கு குறைந்த அளவே புத்தகங்கள் வந்துள்ளதால், அனைத்து மாணவர்களுக்கும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்று மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி கடந்த ஆண்டு தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கும் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை அ.தி.மு.க., தலைமையிலான அரசு தள்ளி வைத்து சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து பெற்றோர் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இரண்டு மாத இழுபறிக்கு பின்னர், சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து கடலூரில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக குடோனிலிருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த 9ம் தேதி முதல் லாரிகள் மூலம் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாடப் புத்தகங்களை பெற்ற ஆசிரியர்கள், அரசு அறிவிப்பின்படி நீக்கல் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மேற்கொண்டனர். மாவட்டத்தில் உள்ள 1,618 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 3,50,000 மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் அனைத்து புத்தகங்களும் இலவசமாக வழங்க வேண்டும்.
ஆனால் மாவட்டத்திற்கு இரண்டு லட்சத்து 70 ஆயிரம் செட் புத்தகங்கள் மட்டுமே வந்துள்ளன. அதிலும், 7ம் வகுப்பிற்கு தமிழ், 8ம் வகுப்பிற்கு ஆங்கிலம், 9ம் வகுப்பிற்கு கணிதம், 10ம் வகுப்பிற்கு அறிவியல் பாடப் புத்தகங்கள் வரவில்லை. இந்த புத்தகங்களை அனைத்து மாணவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால், ஒவ்வொரு மாணவருக்கும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய புத்தகங்கள் பிறகு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த நிலை என்றால், மாவட்டத்தில் உள்ள 119 தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை படிக்கும் ஒரு லட்சத்து 19 ஆயிரம் மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்களை பள்ளி நிர்வாகம் நேரடியாக பாடநூல் கழக குடோனில் உரிய கட்டணத்தைச் செலுத்தி வாங்கிக் கொள்ள அரசு அறிவித்தது.
அவ்வாறு தனியார் பள்ளி நிர்வாகிகள், சமச்சீர் பாடபுத்தகங்களை வாங்க பாடநூல் கழக குடோனுக்குச் சென்றபோது, புத்தகங்கள் இருப்பு இல்லை என கூறி விட்டனர். இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.
இருப்பினும் அரசு அறிவித்தப்படி வழங்கப்பட்ட புத்தகங்களை கொண்டு அனைத்து பள்ளிகளிலும் பாடம் நடத்த துவங்கி விட்டனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு உத்தரவைத் தொடர்ந்து பாடநூல் கழக குடோனில் இருந்த புத்தகங்களை கடந்த 9ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.
புத்தக பற்றாக்குறை குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து கூடுதல் புத்தகங்கள் நேற்று (நேற்று முன் தினம்) அனுப்பி வைக்கப்பட்டது. அந்த புத்தகங்களை 6 லாரிகள் மூலம் இன்று (நேற்று) அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு இன்று (நேற்று) முதல் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டு நாளில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் முழுமையாக புத்தகம் வழங்கப்பட்டுவிடும் என்றனர்.
குழு நியமனம்: சமச்சீர் பாடப்புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் முழுமையாக சென்றடைந்ததா? அந்த புத்தகங்களில் உரிய திருத்தம் செய்து அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதா என்பதை கண்காணிக்க சி.இ.ஓ., உத்தரவின் பேரில் தலைமை ஆசிரியர் தலைமையில் நான்கு பேர் கொண்ட 10 குழு அமைக்கப்பட்டு பள்ளிகள் தோறும் ஆய்வு செய்து வருகின்றனர். அதேப்போன்று சி.இ.ஓ.,- டி.இ.ஓ., - ஏ.இ.ஓ.,க்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக