சென்னை : "இரட்டைப் பட்டம் பெற்ற பெண்ணை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாரதியார் பல்கலையில், கவிதா என்பவர் பி.காம்., முடித்தார். அண்ணாமலை பல்கலையில், தொலை தூரக் கல்வியில் எம்.காம்., முடித்தார். பெரியார் பல்கலையில் இணைப்புப் பெற்ற ஒரு கல்லூரியில், பி.எட்., படிப்பில் 2006-07ம் ஆண்டில் சேர்ந்தார். அப்போது, அண்ணாமலை பல்கலையில் தொலை தூரக் கல்வியில், பி.ஏ., ஆங்கிலமும் சேர்ந்தார். பி.எட்., படிப்பில் 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பி.ஏ., படிப்பில் அதே ஆண்டில் டிசம்பர் மாதம் தேர்ச்சி பெற்றார். பட்டதாரி உதவி ஆசிரியர் பணியிடத்துக்கு, கவிதாவுக்கு அழைப்பு வந்தது. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. ஆசிரியர் பணிக்கு, கவிதா தேர்ந்தெடுக்கப்படவில்லை. தான் பெற்ற பி.ஏ., மற்றும் பி.எட்., பட்டங்களை ஏற்றுக் கொண்டு, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கக் கோரி பள்ளி கல்வித் துறை, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனுக்கள் அனுப்பினார். ஒரே நேரத்தில் இரட்டைப் பட்டப் படிப்பு படித்ததால், அதை ஏற்க முடியாது என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு பரிசீலிக்கக் கோரி, ஐகோர்ட்டில் கவிதா மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஏ.ஆர்.சுரேஷ் ஆஜரானார். நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தில் இருந்து, மனுதாரர் தகவல் பெற்றுள்ளார். பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு இரட்டைப் பட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என, அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, சென்னைப் பல்கலைக்கழகம் அளித்த கடிதத்தை ஏற்பது சரியல்ல. இரட்டைப் பட்டத்தை ஏற்பது தொடர்பாக, ஆசிரியர்கள் தேர்வு வாரியம் தான் முடிவெடுக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் என, ஆசிரியர்கள் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, பள்ளிக் கல்வி இணை இயக்குனரும் பதிலளித்துள்ளார். எனவே, மனுதாரரை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுத்து, தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ நியமிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் என, ஆசிரியர்கள் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, பள்ளிக் கல்வி இணை இயக்குனரும் பதிலளித்துள்ளார். எனவே, மனுதாரரை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுத்து, தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ நியமிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக