சென்னை : உயர் கல்வித் துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையில், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு, கவுன்சிலிங் மூலம், பொது இட மாறுதல் அளிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் முதன்மைச் செயலர் கண்ணன் பிறப்பித்துள்ள அரசாணை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்க, கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கவுன்சிலிங்கை, இம்மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல, அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக்குகள் மற்றும் அரசு சிறப்புப் பயிலகங்களில் பணிபுரியும், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும், கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்க, தொழில்நுட்பக் கல்வி ஆணையருக்கு, அதிகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. பொது நலன் கருதி, எந்தவொரு ஊழியரையும், எப்போது வேண்டுமானாலும் இடமாற்றம் செய்வதற்கு ,அல்லது குறிப்பிட்ட இடத்தில் பணிபுரிய அனுமதிப்பதற்கு, இந்த உத்தரவுகள் எந்த வகையிலும் தடையாக இருக்காது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக