பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/12/2011

ஆசிரியர்களுக்கு ஃபுல்பிரைட் உதவித்தொகை-

சென்னை: அமெரிக்கா- இந்திய கல்வி அறக்கட்டளை (USIEF) சார்பில் கல்வி தொடர்பான பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஃபுல்பிரைட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகம் உலகம் முழுவதும் பல்வேறு கல்விதொடர்பான உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத்தரப்பினருக்கும் இந்த அறக்கட்டளை கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது.
நடப்பாண்டில் பல்வேறு துறைகளுக்கு உதவித்தொகைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஜூலை 15ம் தேதியுடன் இறுதித் தேதி முடிவடைந்தது. இருப்பினும் ஒரு சில துறைகளுக்கு வரும் செப்., 15ம் தேதி வரை காலக்கெடு உள்ளது.
ஃபுல்பிரைட் ஆசிரியர்கள் மாற்றிக்கொள்ளும் திட்டம் (Fulbright Teacher Exchange Program):
இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவர். ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அமெரிக்கப் பள்ளிகளுக்கு ஒரு பருவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள ஆசிரியர்கள் இங்கு வரவழைக்கப்படுவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வெளிநாட்டு மொழி கற்பித்தல் திட்டம் (Fulbright Foreign Language Teaching Assistant Program (FLTA):
ஆங்கிலத்தில் முதுநிலைப்பட்டம் பெற்ற 21 வயது முதல் 29 வயது வரம்பு உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். பெங்காளி, குஜராத்தி, உருது, இந்திப் பாடங்களை அமெரிக்காவில் கற்றுத்தரும் வகையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒன்பது மாத கால அவகாசம் இதற்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு www.usief.org.in  என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக