க்யூ.எஸ். என்னும் பெருமைக்குரிய சிறந்த பல்கலைக்கழகங்களின் உலக தரவரிசை பட்டியலில் 200 இடங்களுக்குள் இடம்பிடிக்க இந்திய பல்கலைக்கழகங்கள் தவறிவிட்டன.
இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி.-டெல்லி தரவரிசை பட்டியலில் 218 வது இடத்தை வகிக்கிறது. அதை தொடர்ந்து ஐ.ஐ.டி.-மும்பை 225 வது இடத்திலும், ஐ.ஐ.டி.-சென்னை 281வது இடத்தையும் பிடித்துள்ளது.
தரவரிசை பட்டியலில் சிறந்த கல்வி நிறுவனமாக பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் அதை தொடர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் முன்னணி இடத்தை வகிக்கின்றன.
கடந்த ஆண்டின் நிலவரப்படி ஐ.ஐ.டி.-மும்பை 187வது இடத்தையும், ஐ.ஐ.டி.-டெல்லி 202வது இடத்தையும், ஐ.ஐ.டி.-சென்னை 262வது இடத்தையும் வகித்தன.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆங்கில பாட வாரியாக தரவரிசை பட்டியலில் 51வது இடத்தை பெற்று விளங்குகிறது.
க்யூ.எஸ். ஆசியா ரேங்கிங் பட்டியலில் ஐ.ஐ.டி.-கான்பூர், ஐ.ஐ.டி.-டெல்லி, ஐ.ஐ.டி.-சென்னை, ஐ.ஐ.டி.-கராக்பூர் மற்றும் ஐ.ஐ.டி.-ரூர்கி ஆகியவை இடம்பிடித்துள்ளன. ஐ.ஐ.டி.-மும்பை இரண்டு இடங்களிலிருந்து பின் தங்கி உள்ளது.
ஆசியாவில் சிறந்த பல்கலைக்கழகமாக ஹாங்காங் யூனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் விளங்குகிறது. கடந்த ஆண்டு 37வது இடத்தை பிடித்திருந்த ஐ.ஐ.டி.-கான்பூர் இந்த ஆண்டு 36 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக