பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/22/2011

2012 ஏப்ரல் 8ல் ஐஐடி-ஜேஇஇ தேர்வு


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க நடைபெறம் நுழைவுத் தேர்வான ஐஐடி-ஜேஇஇ 2012ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி நடைபெற உள்ளது.
ஐஐடியில் வழங்கப்படும் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். ஐஐடிக்கள் மட்டுமல்லாமல் வேறு பல கல்வி நிறுவனங்களும் இந்த நுழைவுத் தேர்வு முடிவினை தங்களது மாணவ சேர்க்கைக்கு எடுத்துக் கொள்வதால், மாணவர்களிடையே இந்த தேர்வுக்கு அதிக மதிப்பு உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். 2010 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இருந்து இந்த நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும் கல்வியாண்டில் நடைபெறும் நுழைவுத் தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அக்டோபர் 31ம் தேதியில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நிறுவனத்தை சென்று சேர கடைசி நாள் டிசம்பர் மாதம் 15ம் தேதியாகும். நுழைவுத் தேர்வு 2012, ஏப்ரல் 8ம் தேதி நடைபெறுகிறது. காலை 9-12 மணி வரை முதல் தாளும், பிற்பகல் 2-5 மணி வரை இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடைபெறும்.
கேள்வித்தாள்கள் மூன்று பாடப்பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கும். இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டு தேர்வுகளுக்கும் தலா 3 மணி நேரம் ஒதுக்கப்படும். சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். சரியான பதிலுடன் உள்ள வட்டத்தை கருப்பு மை பேனாவால் நிரப்ப வேண்டும். சில பாடப்பிரிவு கேள்விகளுக்கு அளிக்கப்படும் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்களும் உண்டு.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக