விருதுநகர் : அரசுப் பணியை ராஜினாமா செய்யாமல், நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவரும், பூத் சிலிப் வழங்காத அங்கன்வாடி பணியாளர் என இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விருதுநகர் நகராட்சி 10வது வார்டு பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு, பூத் சிலிப் வழங்கும் பணிக்கு, ராவ்பகதூர் எம்.எஸ்.பி., நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அங்கன்வாடி மைய பொறுப்பாளரான கோமதி நியமிக்கப்பட்டிருந்தார். இவர், நேரடியாக வினியோகம் செய்யாமல், வேறு நபர் மூலம் பூத் சிலிப் வழங்கியதாக, பறக்கும்படைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், வேறு நபர் மூலம் பூத் சிலிப் வழங்கியது உறுதியானதால், கோமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது போல், சிவகாசி ஒன்றியத்தில் முத்துராமலிங்கபுரம் காலனி அங்கன்வாடி உதவியாளராக சியாமளாதேவி பணியாற்றி வருகிறார். இவர், தனது பணியை ராஜினாமா செய்யாமல், உள்ளாட்சி தேர்தலில் சிவகாசி நகராட்சி 8வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தல் நடத்தை விதி மீறியதாக, சியாமளாதேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, மாவட்டத்தில் இதுவரை அங்கன்வாடி பணியாளர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக