சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள +2 தேர்வு எழுத உள்ள தனித் தேர்வாளர்களுக்கான விண்ணப்பங்கள், வரும் 5ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 தேர்வு நடைபெற உள்ளது. இதில் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவியர் ஆயிரக்கணக்கானோர் தேர்வெழுத உள்ளனர். மேலும் தனித் தேர்வாளர்களும் அவர்களோடு +2 தேர்வு எழுத உள்ளனர்
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி கூறியதாவது:
தனித் தேர்வு எழுதுபவர்களுக்கான விண்ணப்பங்கள், அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், அரசு தேர்வுகள் இணை இயக்குனர் ஆகிய இடங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. தனித் தேர்வாளர்கள் தேர்வு விண்ணப்பங்களை வரும் 5ம் தேதி முதல் மேற்கண்ட பகுதிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் குறியீட்டு சீட்டுப் படிவத்தில் ஒட்டப்படும் தனித் தேர்வாளரின் போட்டோக்கள் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டவைகளாக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் குண்டூசி, ஸ்டேபிளர் பின் உள்ளிட்டவை பயன்படுத்த கூடாது. மேலும் விண்ணப்பங்களை மடக்க கூடாது. பூர்த்தி செய்யப்பட்ட தனித் தேர்வாளர்களின் விண்ணப்பங்களை இந்த மாதம் 20ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக