ஆசிரியர் பயிற்றுனர்கள் தினமும் காலை 8.40 மணி முதல் 9 மணிக்குள் அந்தந்த வட்டார வள மைய த்தில் ஆஜராகி, வருகையை கட்டாயம் பதிவு செய்த பின்னரே பள்ளி பார்வையிடலுக்குச் செல்ல வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.பள்ளி பார்வைக்குச் செல்லும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர்கள் பணியில் இல்லாதபட்சத்தில், அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்றும் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை டிசம்பர் 1 (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. தொலைதூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்வதென்றால், முதல் நாளே ‘மூவ்மென்ட் ரிஜிஸ்டரில்’ பதிவு செய்துவிட் டுச் செல்ல தடையி ல்லை,’’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக