1 . பள்ளிகள் நிலையிறக்கம் செய்யப்படும் தலைமையாசிரியர்களுக்கு பணப்பயனோ பணிப்பயனோ பாதிக்காதவண்ணம் உடனுக்குடன் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படவேண்டும்
2 . தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை (CPS ) இரத்து செய்ய வேண்டும்.
3 . TETOJAC போராட்டத்தின் நோக்கமான மத்திய அரசுக்கு இணையான ஊதியம் விகிதங்களை அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.
4 . அரசாணை 400 ஐ திருத்தம் செய்து இடைநிலை ஆசிரியராக பணியேற்ற நாளிலிருந்தே பணிக்காலத்தை கணக்கிட்டு நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவியுயர்வு பட்டியலில் வைக்க வேண்டும்
5 . TET (TEACHER ELIGIBILITY TEST ) ஆசிரியர் தகுதித் தேர்வினை இரத்து செய்ய வேண்டும் .
6 . வரும் கல்வியாண்டு முதல் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 % இலவச இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும்
7 . AEEO அலுவலகங்களில் அமைச்சு பணியாளர்களை ஊடனடியாக நியமித்து பணித்தேக்கத்தை நீக்க வேண்டும்
8 . 01.06.2006 வரை தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணிப்பலனும் பணப்பயனும் வழங்க வேண்டும்.
9.ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் துப்புரவாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர்களை நியமிக்க வேண்டும்.
10. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்
11 . இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்க பள்ளித் துறையில் 25% பட்டதாரிப் பணியிடமும் பள்ளிகல்வித் துறையில் 10% முதுகலை பட்டதாரி ஆசிரியப் பணியிடமும் ஒதுக்கப்பட வேண்டும் .
12 . பல மாவட்டங்களில் நிலுவையில் 17 A / 17 B ஆகிய தண்டனைகளை பொறுப்பாளர்களின் மீதிருந்து நீக்க வேண்டும்.
13 . ரு 5000 தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட இருக்கும் உடற்கல்வி , ஓவியம் மற்றும் கைத்தொழில் ஆசிரிய நியமன முறையை ரத்து செய்து மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட வேண்டும்.
14 . முறைகேடான பதவி உயர்வுகள் மற்றும் மாறுதல்களை ரத்து செய்து முறையாக கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.
15. இடைநிலை ஆசிரிய பணியிடங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக