வேலாயுதம்பாளையம்: ""கரூர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 33 அரசு பள்ளிகளின் பராமரிப்புக்கு ரூ.4.82 கோடி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்,'' என அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.கரூர் மாவட்டம் புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் கலெக்டர் ÷ஷாபனா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., காமராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கீதா, யூனியன் தலைவர் திரு.வி.க., மாவட்ட கவுன்சிலர் வேலுமணி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் கமலக்கண்ணன், லலிதா விவேகானந்தன், பெரியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் பரமானந்தம் வரவேற்றார்.போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பங்கேற்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 203 பேருக்கும், மாணவர்கள் 172 பேருக்கும், நொய்யல் ஈ.வெ.ரா., உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 58 பேருக்கும் என மொத்தம் 433 சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:தமிழக முதல்வர் ஜெயலலிதா, முதல்வராக பதவி ஏற்கும் ஒவ்வொரு தருணத்திலும் கல்வித்தரத்தை மேம்படுத்தி வருகிறார். உலகத்தரத்துக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு "லேப்டாப்' வழங்க 9 ஆயிரத்து 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.தமிழக அரசின் கடன் சுமை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் நிலையிலும் கல்விக்காக இவ்வளவு தொகை வழங்கி வருவது பெருமைக்குரியது.புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 வகுப்பு அறைகள் கட்டுவதற்கு 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 33 அரசு பள்ளிகளின் பராமரிப்புக்காக 4 கோடியே 82 லட்சம் ரூபாய் முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கியுள்ளார்.மாணவர்கள் நன்கு படித்து பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக