இந்தியாவில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி மறுக்கும்பட்சத்தில், உதவி தேவைப்படுவோர் ஆலோசனை பெற சமூக சட்ட நிபுணர் அமைப்பு இந்திய அளவிலான ஹெல்ப்லைனை துவக்கியுள்ளது.
தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசாக கல்வி அளிக்க வேண்டும் என்ற சட்டம் 2009ஐ ஒரு சில பள்ளிகளே பின்பற்றி வருகின்றன.
பல தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. இது குறித்து இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும், 9868529459, 8826456565 என்ற எண்களில் தொடர்பு கொண்டு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். காலை 10 மணி முதல் 5 மணி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இந்த எண்ணில் பேசலாம். என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்ற சட்டத்தின் ஒரு பகுதியாக 2010, ஏப்ரல் 1ம் தேதி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 விழுக்காடு ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பல மாநிலங்களில் இந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இதுபோன்ற பள்ளிகள் மீது அரசும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்வதில்லை.
எனவே, இந்த சட்டத்தினால் எந்த ஏழை சமுதாயமும் பயன்பெறவில்லை. எனவே, இதுபோன்ற ஏழைகள் பயன்பெறும் வகையில் ஒரு சமூக தொலைத்தொடர்பை உருவாக்கி, அவர்களுக்குள்ள உரிமையையும், பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த சட்ட ஆலோசனையையும் வழங்க வேண்டும் என்று சமூக சட்ட நிபுணர் அஷோக் அகர்வால் முடிவெடுத்து இந்த ஹெல்ப்லைனைத் துவக்கியுள்ளார்.
இதன்படி, ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற இயலும். இந்த திட்டம் முதன் முதலில் டெல்லி அளவில் செயல்படுத்தப்பட்டு, அதன்பிறகு டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இத்திட்டம் இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக