சென்னை : பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர் மூவர், இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கும் பட்டியலுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக பணியாற்றி வரும் ராமேஸ்வர முருகன் (இடைநிலைக் கல்வி), மோகன்ராஜ் (தொழிற்கல்வி) மற்றும் நூலகத் துறை இணை இயக்குனர் பிச்சை ஆகிய மூவரையும், இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கும் பட்டியலுக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது, இயக்குனர் நிலையில், பாடநூல் கழக செயலர் பதவி காலியாக உள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன், கூடுதலாக இதையும் கவனித்து வருகிறார். இந்தப் பணியிடத்தில் ஒருவருக்கு, ஓரிரு நாளில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், நான்கு இயக்குனர்கள் ஓய்வு பெற உள்ளனர். அப்போது, தற்போது பட்டியலில் உள்ள இரண்டு பேர் உட்பட, மேலும் இருவருக்கு இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
Source: dinamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக