அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வாய்ப்பு இருந்தும், பக்கத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்தால், அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முடியாது; முழுக் கட்டணத்தையும் பெற்றோரே ஏற்க வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி கூறினார்.
அரசு பொறுப்பல்ல
அவர் கூறியதாவது: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 கி.மீ., தொலைவிற்குள் அரசுப் பள்ளிகள் இல்லாத பட்சத்தில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், அருகில் இருக்கும் தனியார் பள்ளிகளில், குழந்தைகளைச் சேர்க்கலாம். இதற்கான கட்டணத்தை மட்டுமே, தமிழக அரசு ஏற்கும். அரசுப் பள்ளிகள் அருகில் இருந்தும், தனியார் பள்ளிகளில் சேர்த்தால், கட்டணத்தை அரசு ஏற்காது. தமிழகத்தில், பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. எனவே, இந்த விவகாரத்தை, பெற்றோரும், பள்ளி நிர்வாகிகளும் புரிந்து கொள்ள வேண்டும். இலவசக் கல்வி அடிப்படையில், 25 சதவீதத்திற்கான இடங்களை விட, அதிகமான விண்ணப்பங்கள் வரும் போது, குலுக்கல் முறையில், குழந்தைகளைத் தேர்வு செய்யலாம். இவ்வாறு செந்தமிழ்ச்செல்வி கூறினார்.
முறைகேட்டிற்கு வழி
பெயர் வெளியிட விரும்பாத, தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: குலுக்கல் அடிப்படையில் குழந்தைகளுக்கு, "சீட்' கொடுப்பது, லஞ்சத்திற்கு வழி வகுக்கும். குலுக்கலே நடத்தாமல், பணத்தைப் பெற்று, தாங்கள் விரும்பும் குழந்தைகளுக்கு, பள்ளி நிர்வாகிகள், "சீட்' கொடுக்க நேரிடும். எனவே, இந்த விவகாரத்தில், எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி, மாணவர் சேர்க்கையை நடத்த, உரிய வழிகாட்டுதல்களை இயக்குனரகம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பள்ளிகள் அதிகம்
தமிழகம் முழுவதும், மூலை முடுக்குகளில் எல்லாம் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நடப்பு கல்வியாண்டு நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை, 54 ஆயிரத்து, 957 ஆக உள்ளது. இதில், அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் சேர்த்து, 35 ஆயிரத்து, 795 பள்ளிகள் (65.13 சதவீதம்) இயங்கி வருகின்றன. எனவே, 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெறப்போகும் குழந்தைகளின் எண்ணிக்கை, மிகக் குறைவாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Dinamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக