கோவை :அரசு துறைகளில் புரையோடும் லஞ்சத்தை வேரறுக்கவும், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும், லஞ்ச ஒழிப்பு இயக்குனரின் இணையதள முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கட்டாயமாக வெளியிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் எந்த துறையிலும், லஞ்சம் ஆல விருட்சமாக ஊடுருவி வருகிறது. லஞ்சத்தை வேரறுக்க, எத்தனை முயற்சி எடுத்தாலும், அரசு துறைகளில் கீழ்மட்டம் முதல் மேல் மட்டம் வரை வியாபித்து, பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. குமஸ்தாக்கள், வி.ஏ.ஓ.,க்கள், தாசில்தார்கள் லஞ்சம் வாங்கி கைதாவது ஒருபுறம் இருக்க, இப்போதெல்லாம், பெரும் முதலைகளும் லஞ்ச வலைக்குள் விழுகின்றன. சுங்கத்துறை கூடுதல் இயக்குனர் ராஜன், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் உட்பட உயர் அதிகாரிகளும் லஞ்ச வழக்குகளில் கைதாகியுள்ளனர். கர்நாடகாவில் ஒரு எம்.எல்.ஏ., லஞ்சம் வாங்கியபோது, கையும், கரன்சியுமாக கைதானார்.
லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல, லஞ்சம் கொடுப்பதும் குற்றம். இது குறித்து பொதுமக்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை. தங்கள் காரியம் சாதித்தால் போதும்; அதற்கு சிறிதளவு செலவழித்தால், என்ன இழப்பு ஏற்படப்போகிறது என்ற மக்களின் சுயலாப சிந்தனையும் லஞ்சம் பெருக, முக்கிய காரணம்.மத்திய, மாநில அரசுகளின் எந்த துறையிலும், லஞ்சம் ஆல விருட்சமாக ஊடுருவி வருகிறது. லஞ்சத்தை வேரறுக்க, எத்தனை முயற்சி எடுத்தாலும், அரசு துறைகளில் கீழ்மட்டம் முதல் மேல் மட்டம் வரை வியாபித்து, பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. குமஸ்தாக்கள், வி.ஏ.ஓ.,க்கள், தாசில்தார்கள் லஞ்சம் வாங்கி கைதாவது ஒருபுறம் இருக்க, இப்போதெல்லாம், பெரும் முதலைகளும் லஞ்ச வலைக்குள் விழுகின்றன. சுங்கத்துறை கூடுதல் இயக்குனர் ராஜன், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் உட்பட உயர் அதிகாரிகளும் லஞ்ச வழக்குகளில் கைதாகியுள்ளனர். கர்நாடகாவில் ஒரு எம்.எல்.ஏ., லஞ்சம் வாங்கியபோது, கையும், கரன்சியுமாக கைதானார்.
லஞ்சம் என்பது தீமையானது; அதை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற விழிப்புணர்வை, மக்கள் இடையே ஏற்படுத்தும் நடவடிக்கையை, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் எடுத்து வருகிறது. இதற்கான முதல்கட்ட முயற்சியாக, அரசின் பல்வேறு துறைகளின் இணையதளங்களில், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரின் இணையதள முகவரி மற்றும், தொலைபேசி எண்களை வெளியிடவும், இதற்கான இணையதள தொடர்பு (லிங்க்) அளிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமை செயலகத்தின் அனைத்து துறைகள் மற்றும் துறை தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
ஊழல் என்பது ஒரு பாவம். அது ஆரம்ப நிலையிலேயே ஒழிக்கப்பட வேண்டும். லஞ்சம், ஊழல் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு ஆணையர் அரசிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதன்படி, அரசின் அனைத்துத் துறை இணையதளங்களிலும் கீழ்கண்ட வாசகங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். அந்த வாசகங்கள்:
லஞ்சம் சட்டவிரோதமானது; லஞ்சம் பற்றிய புகார்களை பின்வரும் முகவரிக்கு எழுதி அனுப்பவும். விழிப்புப் பணி, லஞ்ச ஒழிப்பு இயக்குனர், சென்னை - 28.
தொலைபேசி எண்: 2461 5989/ 2461 5929/ 2461 5949 இந்த கோரிக்கை குறித்து அரசு நன்கு பரிசீலித்தபின், தலைமை செயலக நிர்வாக துறை மற்றும் அனைத்து துறைகளின் தலைவர்களும் மேற்கண்ட வாசகங்களை தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரின் இணையதளத்துக்கு தொடர்பு (லிங்க்) ஏற்படுத்தி தருமாறு, உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு, தலைமை செயலாளர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக