சென்னை : கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பாக ஐகோர்ட்டில் பொதுநலமனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த வட்டார மாணவர்களை ஒவ்வொரு
பள்ளியும் சேர்க்கலாம் என்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும் என
கோரிக்கை விடப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்
சேர்க்கைக்கு இந்த பட்டியல் உதவும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணை ஐகோர்ட் தலைமை நீதிபதி முன் ஏப்ரல் 23ம் தேதி
விசாரணைக்கு வர உள்ளது.