தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் இந்த மாதத்தில் பொது மாறுதல் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டு அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால் வழக்கமாக
நடைபெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு பற்றி எந்தவித தகவல்கள்
இல்லாததால் ஆசிரியர்கள் இடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. எனவே
இதுகுறித்து கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகள் கூறியது கலந்தாய்வு முடிந்த
பிறகு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 1 : 30 ஆசிரியர்
மாணவர் விகிதம் நடைமுறைப்படுத்த உள்ளோம். அதில் குறைந்தபட்சம் 2
ஆசிரியர்களும் 71 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் என்ற விதியை மாற்றி இனி
61 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும், 91 மாணவர்களுக்கு 4
ஆசிரியர்கள் என 1 : 30 விகிதாச்சாரப்படி பணிநிரவல் முடித்தப் பிறகு
இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என தொடக்கக்
கல்வித் துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதே நிலை தான் பள்ளிக்
கல்வித்துறையிலும் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். எனவே 2012 -
2013ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்
கலந்தாய்வு, பணிநிரவலுக்கு பின் நடைபெறும். கட்டாய கல்வி உரிமைச்
சட்டத்தின்படி 1 : 30 விகிதாச்சாரப்படி ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட்டால் தான் அதற்கான SSA நிதி மத்திய அரசிடம் இருந்து
விடுவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.