பொது மக்களுக்கு இருப்பதைப் போலவே, தமிழகத்தில் உள்ள பல லட்சம் அரசு
ஊழியர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, தமிழக அரசு
அறிமுகம் செய்யவுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு, "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருந்தது. அ.தி.மு.க., தலைமையில் புதிய அரசு உருவானதும், இந்த காப்பீட்டுத் திட்டம் கைவிடப்பட்டு, "முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே இருந்த காப்பீட்டுத் திட்டம், "ஸ்டார் ஹெல்த்' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
இலவசம்: இந்நிறுவனம், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரையில் ஒரு நபருக்கு மருத்துவச் சிகிச்சைக்குரிய தொகையை வழங்கி வந்தது. இத்திட்டம் முழுவதும் இலவசம் என்பதால், ஸ்டார் ஹெல்த் நிறுவனம், சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொடுக்கும் தொகையை, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு அரசு ஈடு செய்து வந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், "முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' அமலுக்கு வந்தது. இத்திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரும் இக்காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற முடியும். ஒரு நபருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வரை என்றிருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை, 1.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 113 வகையான நோய்களுக்கு இத்திட்டத்தில் சிகிச்சை பெற முடியும்.
ஒப்படைப்பு: முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும், மூன்றாம் நபர் தான் மருத்துவச் செலவை மருத்துவமனைகளுக்கு அளித்து வருகிறார். ஆனால், "ஸ்டார் ஹெல்த்' என்ற தனியார் நிறுவனத்துக்கு பதில், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான "யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன'த்திடம் தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஒப்படைத்துள்ளது.
அரசு ஊழியர் மருத்துவக் காப்பீடு:
அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்களின் மாத ஊதியத்திலிருந்து மருத்துவக் காப்பீட்டுக்காக குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படுகிறது. இத்தொகையை, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு அளித்து, மருத்துவக் காப்பீட்டுத் தொகை பெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆலோசனை: "ஸ்டார் ஹெல்த் மூலம் அரசு ஊழியர்கள் பெற்று வந்த காப்பீட்டுக்கான காலம் ஜூன் மாதத்தோடுமுடிவடைவதால், ஸ்டார் ஹெல்த் நிவனத்தைக் கைவிட்டு, புதிய நிறுவனம் மூலம் காப்பீட்டுத் திட்டத்தை அமல் செய்ய, அரசு ஆலோசித்து வருகிறது. பொது மக்களுக்கு உள்ளது போல, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்திடமே அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டமும் ஒப்படைக்கப்படலாம் என, அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்காக, தமிழக அரசின் உயர் அதிகாரி மட்டத்திலான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
ரூ.2 லட்சம்? புதிய காப்பீட்டுத் திட்டத்தில், தற்போது அளிக்கப்படும் காப்பீட்டுத் தொகையின் அளவு, 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது, மாதத்துக்கு 25 ரூபாய் என, ஆண்டுக்கு 300 ரூபாய் மருத்துவக் காப்பீட்டுக்காக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பிரிமியத் தொகை, மாதத்துக்கு 75 ரூபாயாக அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.
ஜூன் மாதத்துடன் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துடனான காப்பீட்டு ஒப்பந்தம் முடிவடைவதால், இம்மாதம் முதலே அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தை, அரசு அறிமுகம் செய்யும்.
நன்றி: