பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

6/11/2012

ஏ.இ.இ.ஓ., - முதுநிலை விரிவுரையாளர் தேர்வு முடிவு வெளியீடு : விடைகளை வெளியிட டி.ஆர்.பி., முன் வராதது ஏன்?

உதவி தொடக்க கல்வி அலுவலர் (ஏ.இ.இ.ஓ.,) மற்றும் முதுநிலை விரிவுரையாளர் தேர்வு முடிவை, நேற்று முன்தினம் இரவு, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இரு தேர்வுகளுக்குரிய விடைகளை டி.ஆர்.பி., வெளியிடாதது ஏன் என, தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விடைகளை வெளியிடாவிட்டால், கோர்ட்டுக்குச் செல்வோம் எனவும் கூறியுள்ளனர்.

நம்பிக்கை : தொடக்க கல்வித் துறையில், 34 உதவி தொடக்க கல்வி அலுவலர்களை நியமனம் செய்ய, பிப்ரவரி 26ல், டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடந்தது. இதில், 66 ஆயிரத்து 948 பேர் பங்கேற்றனர். இதேபோல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தில், 33 முதுநிலை விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, மார்ச் 4ல் நடந்தது. இதில், 619 பேர் பங்கேற்றனர். இந்த இரு தேர்வுகளின் முடிவுகளை, நேற்று முன்தினம் இரவு டி.ஆர்.பி., வெளியிட்டது. ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர். பாட வாரியாக தேர்வு செய்யப்பட்ட தேர்வரின் எண்ணிக்கையை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. ஆனால், பெயர்களை வெளியிடவில்லை. நன்றாகப் படித்து தேர்வெழுதியவர்கள், தேர்வாகி விடுவோம் என நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், பலருக்கும் தேர்வு முடிவு அதிர்ச்சி அளித்துள்ளதுஒப்பீடு : இது குறித்து, விழுப்புரத்தைச் சேர்ந்த குமார், 24, கூறியதாவது: ஏ.இ.இ.ஓ., தேர்வுக்காக நானும், என் நண்பர்களும் இத்தேர்வுக்காக கடினமாக உழைத்தோம். பாடத்திற்கு 110 மதிப்பெண்கள், பொது அறிவுக்கு 10 மதிப்பெண்கள், கல்வியியல் பாடத்திற்கு 30 மதிப்பெண்கள் என, 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. தேர்வை நன்றாக எழுதினோம். ஆனால், எங்களில் ஒருவர் கூட தேர்வாகவில்லை. 125 மதிப்பெண்கள் கிடைக்கும் என, நான் எதிர்பார்த்தேன். ஆனால், 105 மதிப்பெண்கள் தான் கிடைத்தது. ஏ.இ.இ.ஓ., தேர்வு பட்டியலில், அதிகபட்சமாக 117 மதிப்பெண்கள் பெற்றவர்கள் இடம்பிடித்துள்ளனர். சரியான முறையில் மதிப்பீடு நடந்ததா எனத் தெரியவில்லை. தேர்வுக்கான விடைகளை, இணையதளத்தில் வெளியிடுவதாக டி.ஆர்.பி., தலைவர், பத்திரிகை பேட்டியில் கூறினார். ஆனால், கூறியபடி விடைகள் வெளியிடவில்லை. எங்களிடம் விடைத்தாள் நகல் இருக்கிறது. டி.ஆர்.பி., விடைகளை வெளியிட்டால், அதனுடன் எங்களது விடைகளை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வோம். டி.ஆர்.பி., அலுவலகத்தில் போன் மூலம் கேட்டதற்கு, "விடைகளை வெளியிட முடியாது; தேர்வு முடிவு வெளியிடப்பட்டு விட்டது; அவ்வளவு தான்!' என்றனர். ஒளிவு மறைவின்றி, தேர்வுக்கான விடைகளை வெளியிட வேண்டும். இல்லையெனில், கோர்ட்டுக்குச் செல்வோம். இவ்வாறு குமார் கூறினார். இதேபோல், முதுநிலை விரிவுரையாளர் தேர்வுக்கான விடைகளையும் டி.ஆர்.பி., வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வெளிப்படை தன்மையை உறுதி செய்ய இதுவே வழி : இரு தேர்வுகளிலும் தேர்வு செய்யப்பட்டவர்கள், உண்மையிலேயே தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனரா என்பதை, தற்போதைய நிலையில் யாரும் உறுதி செய்ய முடியாது. ஏனெனில், தேர்வு செய்யப்பட்டவர்களின் விடைத்தாள் நகல்கள், இணையதளத்தில் வெளியிடவில்லை; "கீ-ஆன்சரும்' வெளியிடவில்லை. தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள், பெற்ற மதிப்பெண்கள் விவரமும் வெளியிடப்படவில்லை. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில், பதிவெண்களை பதிவு செய்தால் மதிப்பெண்கள் தெரியும் வகையில், டி.ஆர்.பி., இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "கீ-ஆன்சரை' வெளியிட்டாலே, தேர்வெழுதிய அனைவரும், தங்களின் மதிப்பெண்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.