ஆசிரியர்
பொது மாறுதல் கலந்தாய்வில் முறை கேடாக வழங்கப்பட்ட மாறுதல் ஆணையை ரத்து
செய்ய வேண்டும். ஜூன் 5க்குள் மறு கலந்தாய்வு நடத்த வேண்டும் என
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கெடு விதித்துள்ளது.
தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு கூட் டம் மதுரையில்
மாநில தலைவர் கண்ணன் தலை மையில் நடந்தது. மதுரை மாவட்ட செயலாளர் முருகன்
வரவேற்றார். இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய
துணைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொரு ளாளர் மோசஸ் வரவு
செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு
தொடக்க கல்வித்துறையில் கடந்த மாதம் 27,28 மற்றும் 29ம் தேதிகளில்
பட்டதாரி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்
ஆகியோருக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது.
ஒளிவுமறைவற்ற
கலந்தாய்வு நடத்தாமல் கட்சியினர் பெயரில், உயர் அலுவலர்களின் பரிந்துரை
களின் அடிப்படையில் காலிப் பணியிடங்களை ஒளித்து வைத்து அத்துமீறல்கள்
நடந்தன. இதை இக்கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
சட்டவிரோதமாக
கலந்தாய்வு இல்லாமல் முறையின்றி வழங்கப்பட்டுள்ள இடமாறுதல் ஆணைகளை ரத்து
செய்ய வேண்டும். வரும் 5ம் தேதிக்குள் பிரச்னைக்குரிய ஒன்றியங்களில் மறு
கலந்தாய்வு நடத்த வேண்டும்.
வரும்
21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடை பெறும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட
தாரி ஆசிரியர் உபரி பணியிட மாறுதல் மற்றும் பணியிட இடமாறுதல் களை எவ்விதப்
புகாருக்கும் இடமின்றி வெளிப்படையான, தூய்மையான முறையில், ஒளிவுமறைவின்றி
நடத்த வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது ஆகிய
தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
கூட்டத்தில்
மாநிலப் பொதுச் செயலாளர் முருக செல்வராசன், மாநில துணைத்தலைவர்கள்
மலர்விழி, மயில், ஜோசப்ரோஸ், சந்திரமோகன், மாநிலச் செயலாளர்கள் மணிமேகலை,
முருகேசன் கலந்துகொண்டனர்.