இந்தியக் கல்வி உரிமைச் சட்டத்தில் தெளிவில்லாத பகுதிகள் சில உள்ளன,
சட்ட அமலாக்கத்தினைக் கண்காணிப்பது யார் என்பதும் குழப்பமாக இருக்கிறது என
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு குறை கூறியிருக்கிறார்.
மூன்றாண்டுகள் முன்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அச்சட்டம் செல்லுபடியாகும் என அண்மையில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வதாகக் கூறும் அச்சட்டத்தின் கீழ், அனைத்து தனியார் பள்ளிகளும், அவை அமைந்திருக்கும் பகுதிகளில் வாழும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கென 25 சத இடங்களை முதல் வகுப்பில் ஒதுக்கவேண்டும்.
அத்தகைய ஒதுக்கீட்டின் கீழ் இடம் கோரி விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்ட, மாணவர் ஐவரின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது கல்வி உரிமைச் சட்டத்திற்கு முரணானது, எனவே அக்குழந்தைகளை சேர்த்துக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு உத்திரவிடவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
வழக்கில் சம்பந்தப் பட்ட ஐந்து பள்ளிகளில் நான்கு நலிவடைந்தோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டதாகக் கூறின. மற்றொன்று நலிவடைந்த மாணவர்களைத் தாங்களாகவே தெரிவு செய்து 25 சத இடங்களை நிரப்பிவிட்டதாகக் கூறியது.
வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி சந்துரு, சட்டமே குழப்பமாயிருக்கும்போது நிர்வாகத்தினரின் நடவடிக்கை சட்டத்திற்கு முரணாக இருப்பதாகக் கூறமுடியாது என்றார்
குறிப்பாக ஒரு பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் இருந்தால், எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்ற உரிமை பெற்றோர்களுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை, ஒரு பள்ளி சட்டத்திற்குப் புறம்பாக ஒரு மாணவரைச் சேர்க்க மறுத்தால், சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு உத்திரவிடும் அதிகாரம் எந்த துறைக்கு இருக்கிறது என்பதும் இந்த சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி, இச்சூழலில் எந்த நிர்வாகத்தினாலும் உத்திரவு பிறப்பிக்க இயலாது என்று நீதிபதி கூறினார்.
கல்வி ஆர்வலர்கள் இத் தீர்ப்பிற்குப் பிறகாவது சட்டம் அமலாவதைக் கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினர்.
தீர்ப்பை ஆராய்ந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.