புதுடில்லி : பல்க் எஸ்எம்எஸ்கள் அனுப்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக விலக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் குடியேறிய மக்களால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வந்த தகவல்களையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அம்மாநிலத்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய வண்ணம் இருந்தனர்.
இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் பொருட்டு, பல்க் எஸ்எம்எஸ் அனுப்ப மத்திய அரசு அதிரடி தடைவிதித்தது. பின்னர். நாளொன்றிற்கு 5 எஸ்எம்எஸ்கள் அனுப்பலாம் என்று தடையை பின் சிறிது தளர்த்தியது. பின் நாளொன்றிற்கு 20 எஸ்எம்எஸ்கள் என்று மாற்றப்பட்டது.
இந்த தடை, நாளை முடிவடைய உள்ள நிலையில், பல்க் எஸ்எம்எஸ்கள் அனுப்புவதற்கான தடை உடனடியாக விலக்கிக்கொள்ளப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக