பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/08/2012

மூளைச்சாவு அடைந்த மாணவி உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில், மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு உள்ளன. சேலம், மிட்டாபுதூர், கார்மென்ட் ரோட்டை சேர்ந்த ஜேக்கப் - சந்திரா தம்பதியின் மூத்தமகள் ஐஸ்வர்யா,21. சேலம், தனியார் மகளிர் கலைக் கல்லூரியில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்துள்ளார். கடந்த 3ம் தேதி, சாமிநாத
புரத்தை சேர்ந்த தோழி பவித்ராவுடன், ஐஸ்வர்யா, இருசக்கர வாகனத்தில் சேலத்துக்குப் புறப்பட்டு உள்ளார். வாகனத்தை பவித்ரா ஓட்டியுள்ளார். நாமமலை பகுதியில் சென்ற போது, அவ்வழியாகச் சென்ற டாரஸ் லாரியின் முன் சக்கரம் கழன்று, மாணவியர் வந்த வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், காயமடைந்த மாணவியர் இருவரும், சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதில், கோமா நிலைக்குச் சென்ற ஐஸ்வர்யா, மேல் சிகிச்சைக்காக சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும், நினைவு திரும்பாத ஐஸ்வர்யாவுக்கு, மூளைச்சாவு ஏற்பட்டது. அதையடுத்து, மாணவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக, சென்னை, அப்போலோ மருத்துவமனைக்கு ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றனர். மருத்துவமனை நிர்வாகிகள் நிவேதிதா, வித்யா, பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைப்புடன், மாணவியின் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. மருத்துவக் குழுவினர், மாணவி ஐஸ்வர்யா உடலில் இருந்து கண்கள், இருதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் தானமாகப் பெற்று, மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்தனர்.
நன்றி-தினமலர்

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக