உலக
அளவில் அனைத்து நாட்டு தொழிலாளி வர்க்கமும் ஒன்றி ணைந்து, உழைக்கும்
வர்க்கத்தின் அடிப் படை வாழ்வாதார உரிமைகளை வலி யுறுத்தி அக்டோபர் 3ம்தேதி
சர்வதேச போராட்டத் தினத்தை கடைப்பிடிக் கின்றன. இதற்கான அழைப்பை, உலக
தொழிலாளி வர்க்கத்தை சர்வதேச அளவில் ஒன்றிணைத்து வரும் உலக தொழிற்சங்க
சம்மேளனம் (டபிள்யூஎஃப்டியு) விடுத்துள்ளது. 67 ஆண்டுகளுக்கு முன்பு இந்த
அமைப்பு நிறுவப்பட்ட அதே நாளில் உலகளாவிய இந்த மகத்தானப் போராட்டம், உணவு,
குடிநீர், சுகாதாரம், கல்வி வீட்டுவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை
உழைக்கும் மக்களுக்கு உடனே செய்து கொடு என்ற கோரிக்கையை உரத்து முழங்கும்
விதத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கோரிக்கைகள் அனைத்தும்
தொழிலாளர்களின் கோரிக்கைகள் மட்டுமல்ல; உலகெங்கிலும் துன்ப துயரத்தில்
ஆழ்ந்திருக்கிற அனைத்து ஏழை -எளிய மக்களின் அடிப்படை
கோரிக்கைகளாகும்.ஏழை-எளிய மக்களின் வாழ்வாதா ரத்தில் நவீன தாராளமயக்
கொள்கைகள் நாளுக்குநாள் தனது தாக்குதலை தீவிரப் படுத்திவரும் நிலையில்,
பல்வேறு நாடுக ளில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாக பொதுச்சொத்துக்களும்
இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங் களால் கொள்ளையடிக்கப்பட்டுவரும்
நிலையில், இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது
தொழிற்சங்க இயக்கத்தின் கடமையாக மாறியிருக்கிறது. நவீன தாராளமயத்தின்
தாக்குதல்களின் ஒரு பகுதியாக, இத்த கைய கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டிய
அரசின் தலையீடுகளும் தடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையை
அம்பலப்படுத்தி, அதற்கு எதிராக உழைக்கும் வர்க்க மக்களை அணிதிரட்டவும்,
கவுரவமான வாழ்வா தாரத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் உறுதிப்படுத்தும்
போராட்டத்தை முன் னெடுத்துச் செல்லவும் உலக தொழிற் சங்க மையத்தின்
சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.உணவுசர்வதேச அளவிலும், தேசிய அள விலும்
இன்றைக்கு உணவுப்பாதுகாப்பு என்பது ஒரு மிக முக்கிய பிரச்சனையாக
மாறியிருக்கிறது.
உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் உணவுதானியங்கள்
உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களின் விலைகள் கடுமையாக உயர்ந்
திருக்கின்றன. எனவே ‘அனைத்து மக்க ளுக்கும் உணவு’ என்பது இன்றைக்கு மிக
முக்கியமான முழக்கமாக மாறி யிருக்கிறது.2007ம் ஆண்டிலிருந்து 2011 ஜனவரி
வரையிலான கணக்கின்படி உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே
வந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இதை
உறுதிப்படுத்துகிறது. 2008ம் ஆண்டு உலகவங்கியே கூட உணவுப்பொருட்களின்
கடுமையான விலை உயர்வு காரணமாக மேலும் 50மில்லியன் மக்கள் வறுமையின்
கோரப்பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்தது.உலகவங்கியின்
கணக்கீட்டின்படி, சர்வதேச சர்க்கரை விலை கடந்த 30 ஆண்டுகளில்
பார்க்கும்போது தற்போது கடுமையாக அதிகரித்துள்ளது. உலகின் ஒவ்வொரு
மனிதனுக்கும் உணவாக திகழ்கிற கோதுமை விலை 2010 ஜுனுக் கும் 2011
ஜனவரிக்கும் இடையில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந் துள்ளது. இந்த
விலை உயர்வுகள் ஏழை-எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கை யை கடுமையான
துயரத்திற்குள் தள்ளி யிருக்கிறது; மறுபுறத்தில் பெரும் பன் னாட்டு
நிறுவனங்கள் கொழுத்த லாபத் தை சம்பாதித்திருக்கின்றன.
உலகம்
முழுவதிலும் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடித்து சில
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பன் னாட்டு நிறுவனங்கள் வளம்கொழித்துக்
கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகிறது என உலக தொழிற்சங்க சம்மேளனம்
சுட்டிக்காட்டியிருக்கிறது.
நெஸ்லே, கார்கில், க்ராஃப்ட், ஜெனரல் மில்ஸ், பெப்சிகோ, கோக கோலா ஆகி யவை
மேற்குறிப்பிட்ட பெரும் நிறு வனங்களில் சில. இந்தக் கம்பெனிகளின் இடைவிடாத
கொள்ளையால் 85 கோடிக்கும் அதிக மான மக்கள் வருமானம் இழந்து வறுமை யின்
விளிம்பில் தள்ளப்பட்டிருக் கிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகள் என்று
கூறப்படுகிற நாடுகள் கூட இதி லிருந்து தப்பவில்லை. சுமார் 1.1 கோடி
அமெரிக்கர்கள் உணவின்றி தவிக்கிறார் கள். மேலும் 2.2 கோடி அமெரிக்கர்கள்
தங்களது உணவுத்தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக போராடிக் கொண்
டிருக்கிறார்கள்.
உலகிலேயே அமெரிக்கா மிக அதிகமாக விவசாயப்
பொருட்களை உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்துகொண் டிருக்கிற இந்த
தருணத்தில்தான் இவை அனைத்தும் நடந்துகொண்டிருக் கின்றன.பெருவாரியான
உணவுப்பொருட்கள் கையிருப்பு என்ற பெயரில் கிடங்குகளில் மக்கிக்
கொண்டிருக்கிற வேளையில் மிகப்பெருவாரியான மக்கள் உணவுப் பொருள்
வாங்குவதற்கு வழியில்லாமல் தவிக்கிறார்கள். இதுதான் முதலாளித் துவ உற்பத்தி
முறையின் முரண்பாடு என்பதை உலக தொழிற்சங்க சம் மேளனம்
சுட்டிக்காட்டுகிறது.மிகப்ப ெருவாரியான
உணவு தானியங்கள் உயிரி எரிபொருள் தயாரிப் புக்கென்று
மாற்றிவிடப்படுகின்றன. இதன் பொருட்டு மூன்றாம் உலக நாடு களில் பெருமளவிலான
நிலங்கள், கார்ப் பரேட் கம்பெனிகளால் வாங்கப்படுகின் றன. இதன் விளைவாக அந்த
நிலங் களை நம்பி காலம் காலமாக விவசாயத் தில் ஈடுபட்டிருக்கிற விவசாயிகளின்
வாழ்வுரிமையே மறுக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் மக்கள் நலன் காக்கும்
விதத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; உணவுப் பாதுகாப்பை
உறுதிப்படுத்த வேண்டும் என உலக தொழிற்சங்க சம்மேளனம்
வலியுறுத்துகிறது.குடிநீர்ச ுத்தமான
குடிநீர் பெறுவதற்கான உரி மை ஒரு அடிப்படை உரிமை; உலகளா விய உரிமை. ஆனால்
இன்றைக்கு அது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் சீல் வைத்து மூடி
விற்கப்படுகிற ஒரு பண்ட மாகிவிட்டது.
மிகச்சிறிய எண்ணிக்கை யிலான
பன்னாட்டு நிறுவனங்கள் இந்த மகத்தான இயற்கை கொடையை தங் களது வியாபாரப்
பொருளாக கைப்பற்றிக் கொள்கின்றன. உலகின் பல நாடுகளில் கொள்ளை லாபம்
சம்பாதிக்கிற மிகப் பெரும் தொழிலாக இது மாற்றப்படுகிறது.உலகம் முழுவதிலும்
இன்றைக்கு 46 கோடிக்கும் அதிகமான மக்கள் தனியார் கம்பெனிகள் விற்கிற
தண்ணீரை நம் பியே வாழ்கிறார்கள். 1990ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 5.1
கோடி யாக இருந்தது. வெறும் 10 நிறுவனங்களே இந்தத் துறையில் ஆதிக்கம்
செலுத்து கின்றன.வர்த்தக ஒப்பந்தங்களும் நிபந்தனை களும் மூன்றாம் உலக
நாடுகள் தங்களது குடிநீர் ஆதாரங்களையெல்லாம் தனியார் மயமாக்க வேண்டும் என்ற
நிர்ப்பந்தத் தை ஏற்றுச் செயல்படக் காரணமாகி யுள்ளன. இந்தியா, பொலிவியா,
சிலி, அர் ஜெண்டினா, நைஜீரியா, மெக்சிகோ, மலே சியா, ஆஸ்திரேலியா,
பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் குடிநீர் துறையில் நடத்தப்பட்டுள்ள இந்தத்
தாக்குதலுக்கு இரையான தேசங்களாகும். குடிநீர் என்பது ஒவ்வொரு குடி
மகனுக்கும் ஒரு பொதுப் பண்டமாக கிடைக்கச் செய்யப்பட வேண்டும். மனிதப்
பயன்பாட்டுக்கான நீராதாரம் ஒருபோதும் வர்த்தகப் பண்டகமாக கரு தப்படக்கூடாது
என உலக தொழிற்சங்க சம்மேளனம் வற்புறுத்துகிறது.
கல்விஎழுத்தறிவும் கல்வியும் இன்றைய உலகின் மிக முக்கியப் பிரச்சனைகளாக
மாறியிருக்கின்றன; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் நிகழ்த்தப்
பட்டுள்ள மிகப்பெரும் சாதனைகளும் எண்ணற்ற கண்டுபிடிப்புகளும் இன் னும் இந்த
உலகிலிருந்து எழுத்தறிவின் மையை விரட்டியடித்துவிடவில்லை. உலகில் எட்டு
குழந்தைகளில் ஒரு குழந்தை இன்றைக்கும் ஆரம்பப்பள்ளிக் குக் கூட செல்லாத
நிலையே நீடிக்கிறது. வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் 7.5 கோடிக்கும்
அதிகமானோர் எழுத்தறி வற்றவர்களாக இருக்கிறார்கள். இவர் களில் 55 சதவீதம்
பேர் பெண் குழந்தை கள் என்பதை கவனிக்க வேண்டும். வேலையின்மையும் பசியும்
மிகத்தீவிர மாக பரவி வரும் நிலையில், பள்ளிகளில் இடையிலேயே நின்றுவிடுகிற
குழந்தை களின் எண்ணிக்கை வேகமாக அதி கரித்து வருகிறது.வளர்ச்சியடைந்த
நாடுகளிலும் கூட கல்வியும், அதுதொடர்பான பல்வேறு துறைகளும் மிகக்கடுமையான
பிரச் சனைகளாக மாறியிருக்கின்றன.
இவை மாணவர்களின் மிகப்பெரும்
போராட் டத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. உல கின் ஒவ்வொரு பகுதியிலும் பொதுக்
கல்விமுறை என்பது திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.எனவே இலவசமான, தரமான
பொதுக்கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற போராட்டத் திலும்
தொழிற்சங்கங்கள் முன்னணியில் நிற்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.
சுகாதாரம்சுகாதாரம் என்பது வியாபாரம் செய் வதற்கான ஒரு பண்டமல்ல. ஒரு தொழி
லாளியின் உயிரோ எந்தவொரு நபரின் உயிரோ லாபத்தை பெருக்குவதற்கான கருவியாக
ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வளர் முக
நாடுகள் சிலவற்றிலும் சமூகப் பாதுகாப்பு என்பது தொழிற்சங்க இயக் கம்
சாதித்த மிக முக்கியமான அம்சங் களில் ஒன்று. ஆனால் இன்றைக்கு இந்தத்
துறையில் கடுமையான தாக்கு தல்களை மக்கள் எதிர் கொண்டிருக் கிறார்கள்.
சுகாதாரம் என்பது பெரும் வர்த்தக நிறுவனங்களின் அப்பட்டமான தொழிலாக
மாறிவிட்டது. அனைத்து பகுதிகளிலும் சமூகப்பாதுகாப்பு திட்டங் களும்
அழிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுவசதிஉலகின் ஒவ்வொரு குடிமகனுக்கும்
வீட்டுவசதிக்கான உரிமை உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. இதன்பொருள்
பாதுகாப்பான, பொருத்தமான, வசதி யான இல்லம் என்பது ஒவ்வொரு வருக்கும்
கிடைக்க வேண்டும்; அமைதி யான, கவுரவமான, வெளியேற்றப்படு வோம் என்ற அச்சம்
இல்லாத வாழ்க்கை கிடைக்கப்பெற வேண்டும் என உலக தொழிற்சங்க சம்மேளனம்
வலியுறுத்து கிறது.
உலகளாவிய வீட்டுவசதி நெருக்கடி ஏற்பட்டுள்ள
நிலையில் முக்கிய மான பிரச்சனையாக இது நம்முன் எழுந்துள்ளது. ஒரு
மதிப்பீட்டின்படி இன்றைய உலகில் 160 கோடி மக்கள் குடிசைப்பகுதிகளில் எவ்வித
வசதியும் தரமும் இல்லாத நிலையில், வாழ்க்கை யை ஓட்டிவருகிறார்கள்; 10 கோடி
மக்கள் வீடே இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவிலும் முன்னெடுத்துச்
செல்வோம்மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு அம்ச மும் இந்தியாவின் ஒவ்வொரு பிரிவு
தொழிலாளர்களும் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் அனுதினமும் எதிர்கொண்டு
துயரத்தில் ஆழ்ந்திருக் கும் அடிப்படையான பிரச்சனை களாகும். எனவே அக்டோபர்
3ம்தேதி உலக ளாவிய முறையில் நடைபெற உள்ள இந் தப் போராட்டத் தினத்தை இந்தியா
விலும் உலக தொழிற்சங்க சம்மேளனத் துடன் இணைந்த தொழிற்சங்கங்களும் இதர
நட்பு அமைப்புகளும் பெருவாரி யான தொழிலாளர்களின் பங்கேற்போடு நடத்திட
முடிவு செய்துள்ளன. கூட்டங் கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள்,
கருத்தரங்குகள் என தொழிற்சாலைப் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளி லும்
நடத்திட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன.சர்வதேச போராட்டத் தினத்தின் செய்தியை
ஒவ்வொரு தொழிலாளியிட மும் எடுத்துச் செல்வோம்.இதர பல நாடுகளைப்போலவே இந்திய
அரசும், நவீன தாராளமயக் கொள்கையை மேலும் மேலும் தீவிரமாக அமலாக்குவதில்
பிடிவாதமாக இருக் கிறது. இந்தப் பின்னணியில் சர்வதேசப் பார்வையோடு இந்த
இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவோம். இந்த மகத் தான இயக்கம்,
காட்டுமிராண்டித்தன மான முதலாளித்துவ கட்டமைப்புக்கு எதிரான நமது மாபெரும்
போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
//தோழர் ஏ.கே.பத்மநாபன், சிஐடியூ அகில இந்தியத் தலைவர்//
நன்றி தீக்கதிர் நாளிதழ்.
இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மட்டுமல்ல; உலகெங்கிலும் துன்ப துயரத்தில் ஆழ்ந்திருக்கிற அனைத்து ஏழை -எளிய மக்களின் அடிப்படை கோரிக்கைகளாகும்.ஏழை-எளிய மக்களின் வாழ்வாதா ரத்தில் நவீன தாராளமயக் கொள்கைகள் நாளுக்குநாள் தனது தாக்குதலை தீவிரப் படுத்திவரும் நிலையில், பல்வேறு நாடுக ளில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாக பொதுச்சொத்துக்களும் இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங் களால் கொள்ளையடிக்கப்பட்டுவரும் நிலையில், இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது தொழிற்சங்க இயக்கத்தின் கடமையாக மாறியிருக்கிறது. நவீன தாராளமயத்தின் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, இத்த கைய கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டிய அரசின் தலையீடுகளும் தடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையை அம்பலப்படுத்தி, அதற்கு எதிராக உழைக்கும் வர்க்க மக்களை அணிதிரட்டவும், கவுரவமான வாழ்வா தாரத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் உறுதிப்படுத்தும் போராட்டத்தை முன் னெடுத்துச் செல்லவும் உலக தொழிற் சங்க மையத்தின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.உணவுசர்வதேச அளவிலும், தேசிய அள விலும் இன்றைக்கு உணவுப்பாதுகாப்பு என்பது ஒரு மிக முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கிறது.
உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் உணவுதானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களின் விலைகள் கடுமையாக உயர்ந் திருக்கின்றன. எனவே ‘அனைத்து மக்க ளுக்கும் உணவு’ என்பது இன்றைக்கு மிக முக்கியமான முழக்கமாக மாறி யிருக்கிறது.2007ம் ஆண்டிலிருந்து 2011 ஜனவரி வரையிலான கணக்கின்படி உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே வந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இதை உறுதிப்படுத்துகிறது. 2008ம் ஆண்டு உலகவங்கியே கூட உணவுப்பொருட்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக மேலும் 50மில்லியன் மக்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்தது.உலகவங்கியின் கணக்கீட்டின்படி, சர்வதேச சர்க்கரை விலை கடந்த 30 ஆண்டுகளில் பார்க்கும்போது தற்போது கடுமையாக அதிகரித்துள்ளது. உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் உணவாக திகழ்கிற கோதுமை விலை 2010 ஜுனுக் கும் 2011 ஜனவரிக்கும் இடையில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந் துள்ளது. இந்த விலை உயர்வுகள் ஏழை-எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கை யை கடுமையான துயரத்திற்குள் தள்ளி யிருக்கிறது; மறுபுறத்தில் பெரும் பன் னாட்டு நிறுவனங்கள் கொழுத்த லாபத் தை சம்பாதித்திருக்கின்றன.
உலகம் முழுவதிலும் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடித்து சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பன் னாட்டு நிறுவனங்கள் வளம்கொழித்துக் கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகிறது என உலக தொழிற்சங்க சம்மேளனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
உலகிலேயே அமெரிக்கா மிக அதிகமாக விவசாயப் பொருட்களை உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்துகொண் டிருக்கிற இந்த தருணத்தில்தான் இவை அனைத்தும் நடந்துகொண்டிருக் கின்றன.பெருவாரியான உணவுப்பொருட்கள் கையிருப்பு என்ற பெயரில் கிடங்குகளில் மக்கிக் கொண்டிருக்கிற வேளையில் மிகப்பெருவாரியான மக்கள் உணவுப் பொருள் வாங்குவதற்கு வழியில்லாமல் தவிக்கிறார்கள். இதுதான் முதலாளித் துவ உற்பத்தி முறையின் முரண்பாடு என்பதை உலக தொழிற்சங்க சம் மேளனம் சுட்டிக்காட்டுகிறது.மிகப்ப
மிகச்சிறிய எண்ணிக்கை யிலான பன்னாட்டு நிறுவனங்கள் இந்த மகத்தான இயற்கை கொடையை தங் களது வியாபாரப் பொருளாக கைப்பற்றிக் கொள்கின்றன. உலகின் பல நாடுகளில் கொள்ளை லாபம் சம்பாதிக்கிற மிகப் பெரும் தொழிலாக இது மாற்றப்படுகிறது.உலகம் முழுவதிலும் இன்றைக்கு 46 கோடிக்கும் அதிகமான மக்கள் தனியார் கம்பெனிகள் விற்கிற தண்ணீரை நம் பியே வாழ்கிறார்கள். 1990ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 5.1 கோடி யாக இருந்தது. வெறும் 10 நிறுவனங்களே இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்து கின்றன.வர்த்தக ஒப்பந்தங்களும் நிபந்தனை களும் மூன்றாம் உலக நாடுகள் தங்களது குடிநீர் ஆதாரங்களையெல்லாம் தனியார் மயமாக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத் தை ஏற்றுச் செயல்படக் காரணமாகி யுள்ளன. இந்தியா, பொலிவியா, சிலி, அர் ஜெண்டினா, நைஜீரியா, மெக்சிகோ, மலே சியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் குடிநீர் துறையில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலுக்கு இரையான தேசங்களாகும். குடிநீர் என்பது ஒவ்வொரு குடி மகனுக்கும் ஒரு பொதுப் பண்டமாக கிடைக்கச் செய்யப்பட வேண்டும். மனிதப் பயன்பாட்டுக்கான நீராதாரம் ஒருபோதும் வர்த்தகப் பண்டகமாக கரு தப்படக்கூடாது என உலக தொழிற்சங்க சம்மேளனம் வற்புறுத்துகிறது.
கல்விஎழுத்தறிவும் கல்வியும் இன்றைய உலகின் மிக முக்கியப் பிரச்சனைகளாக மாறியிருக்கின்றன; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் நிகழ்த்தப் பட்டுள்ள மிகப்பெரும் சாதனைகளும் எண்ணற்ற கண்டுபிடிப்புகளும் இன் னும் இந்த உலகிலிருந்து எழுத்தறிவின் மையை விரட்டியடித்துவிடவில்லை. உலகில் எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை இன்றைக்கும் ஆரம்பப்பள்ளிக் குக் கூட செல்லாத நிலையே நீடிக்கிறது. வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் 7.5 கோடிக்கும் அதிகமானோர் எழுத்தறி வற்றவர்களாக இருக்கிறார்கள். இவர் களில் 55 சதவீதம் பேர் பெண் குழந்தை கள் என்பதை கவனிக்க வேண்டும். வேலையின்மையும் பசியும் மிகத்தீவிர மாக பரவி வரும் நிலையில், பள்ளிகளில் இடையிலேயே நின்றுவிடுகிற குழந்தை களின் எண்ணிக்கை வேகமாக அதி கரித்து வருகிறது.வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட கல்வியும், அதுதொடர்பான பல்வேறு துறைகளும் மிகக்கடுமையான பிரச் சனைகளாக மாறியிருக்கின்றன.
இவை மாணவர்களின் மிகப்பெரும் போராட் டத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. உல கின் ஒவ்வொரு பகுதியிலும் பொதுக் கல்விமுறை என்பது திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.எனவே இலவசமான, தரமான பொதுக்கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற போராட்டத் திலும் தொழிற்சங்கங்கள் முன்னணியில் நிற்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. சுகாதாரம்சுகாதாரம் என்பது வியாபாரம் செய் வதற்கான ஒரு பண்டமல்ல. ஒரு தொழி லாளியின் உயிரோ எந்தவொரு நபரின் உயிரோ லாபத்தை பெருக்குவதற்கான கருவியாக ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வளர் முக நாடுகள் சிலவற்றிலும் சமூகப் பாதுகாப்பு என்பது தொழிற்சங்க இயக் கம் சாதித்த மிக முக்கியமான அம்சங் களில் ஒன்று. ஆனால் இன்றைக்கு இந்தத் துறையில் கடுமையான தாக்கு தல்களை மக்கள் எதிர் கொண்டிருக் கிறார்கள். சுகாதாரம் என்பது பெரும் வர்த்தக நிறுவனங்களின் அப்பட்டமான தொழிலாக மாறிவிட்டது. அனைத்து பகுதிகளிலும் சமூகப்பாதுகாப்பு திட்டங் களும் அழிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுவசதிஉலகின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வீட்டுவசதிக்கான உரிமை உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. இதன்பொருள் பாதுகாப்பான, பொருத்தமான, வசதி யான இல்லம் என்பது ஒவ்வொரு வருக்கும் கிடைக்க வேண்டும்; அமைதி யான, கவுரவமான, வெளியேற்றப்படு வோம் என்ற அச்சம் இல்லாத வாழ்க்கை கிடைக்கப்பெற வேண்டும் என உலக தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்து கிறது.
உலகளாவிய வீட்டுவசதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் முக்கிய மான பிரச்சனையாக இது நம்முன் எழுந்துள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி இன்றைய உலகில் 160 கோடி மக்கள் குடிசைப்பகுதிகளில் எவ்வித வசதியும் தரமும் இல்லாத நிலையில், வாழ்க்கை யை ஓட்டிவருகிறார்கள்; 10 கோடி மக்கள் வீடே இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவிலும் முன்னெடுத்துச் செல்வோம்மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு அம்ச மும் இந்தியாவின் ஒவ்வொரு பிரிவு தொழிலாளர்களும் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் அனுதினமும் எதிர்கொண்டு துயரத்தில் ஆழ்ந்திருக் கும் அடிப்படையான பிரச்சனை களாகும். எனவே அக்டோபர் 3ம்தேதி உலக ளாவிய முறையில் நடைபெற உள்ள இந் தப் போராட்டத் தினத்தை இந்தியா விலும் உலக தொழிற்சங்க சம்மேளனத் துடன் இணைந்த தொழிற்சங்கங்களும் இதர நட்பு அமைப்புகளும் பெருவாரி யான தொழிலாளர்களின் பங்கேற்போடு நடத்திட முடிவு செய்துள்ளன. கூட்டங் கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் என தொழிற்சாலைப் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளி லும் நடத்திட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன.சர்வதேச போராட்டத் தினத்தின் செய்தியை ஒவ்வொரு தொழிலாளியிட மும் எடுத்துச் செல்வோம்.இதர பல நாடுகளைப்போலவே இந்திய அரசும், நவீன தாராளமயக் கொள்கையை மேலும் மேலும் தீவிரமாக அமலாக்குவதில் பிடிவாதமாக இருக் கிறது. இந்தப் பின்னணியில் சர்வதேசப் பார்வையோடு இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவோம். இந்த மகத் தான இயக்கம், காட்டுமிராண்டித்தன மான முதலாளித்துவ கட்டமைப்புக்கு எதிரான நமது மாபெரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
//தோழர் ஏ.கே.பத்மநாபன், சிஐடியூ அகில இந்தியத் தலைவர்//
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக