ஆசிரியர் தகுதித்தேர்வு
வினாத்தாள் குளறுபடிகள்
குழந்தை மேம்பாடு மற்றும்
கற்பித்தல்
ஆங்கிலத்தில் கேள்வித்தாளைத் தயாரித்து தமிழாக்கம் செய்யும்போது ஏகப்பட்ட
குளறுபடிகளை செய்து ஆசிரியர்களை குழப்பிவிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.உதாரணமாக
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பகுதியில்
1.பின்வருவனவற்றுள் எது புறத்தேற்று முறையின் கீழ் வராது? என்ற வினாவில் Sentence completion test என்பதை வாக்கியம் நிறைவு
செய்தல் சோதனை என்று மொழிபெயர்க்காமல் வெறுமனே வாக்கியம் நிறைவு செய்தல் என்று
மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
10.ஒரு தனிநபரின் மிகப்பொருத்தப்பாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன் என்ற
வினாவுக்கு நன்கு நிலைபடுத்தப்பட்ட தன்னுணர்வு மனம் என்று விடை
கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் தாழ்நிலை மனம்,தன்னுணர்வு மனம் மற்றும் மேனிலை மனம்
எல்லாமும் ஒருங்கே பலமுடன் இருக்கும் நிலை என்பதே மிகச்சரியான
விடையாகும்.ஆதாரம்:கற்றல்,மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் புத்தகம்.
இராம்பதிப்பகம்,சென்னை-93 பேராசிரியர்
கி.நாகராஜன் பக்கம்:354
13.வீட்டுப்பாடத்தை வெறுக்கும் குழந்தையினை நேர்மறையாக திருத்த முயல்வது என்ற
வினாவுக்கு இருத்தல்-கட்டுப்பாட்டு முறை என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால்
கருவிசார் ஆக்க நிலையிறுத்த முறை என்பதே சரியான விடையாகும். ஆதாரம்:கற்றல்,மனித
வளர்ச்சி தொடர்பான உளவியல் புத்தகம். இராம்பதிப்பகம்,சென்னை-93 பேராசிரியர் கி.நாகராஜன் பக்கம்:201 இல்
நாம் விரும்பும் துலங்கலை வலுவூட்டி,நடத்தையாக ஆக்குதல் என்பதே ஸ்கின்னரின்
செயல்படு ஆக்கநிலையிறுத்தத்தின் அடிப்படை சாரமாகும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
16.மனவெழுச்சி காதார்ஸிஸ் என்பது என்ற வினாவில் Emotional catharsis means என்பதை மனக்குமுறல்களை
ஆற்றுப்படுத்துதல் என்று மொழிபெயர்க்காமல் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்து
ஆசிரியர்களை குழப்பியுள்ளனர்.
23.மனவெழுச்சி நுண்ணறிவுடன் தொடர்புள்ள முக்கிய பெயர் என்ற வினாவுக்கு
ஜாக்மேயர்,பீட்டர் ஸலோவே,எஸ்.ஹெயின்,லீப்ரோவேதனி போன்ற புத்தகத்தில் இடம்
பெற்றுள்ள எந்த பெயரையும் கொடுக்காமல் டேனியல் கோல்மென் என்றுபுத்தகத்தில் இல்லாத
ஒரு தொடர்புடைய பெயரை கொடுத்திருப்பது எந்த விதத்தில் சரி?
25.கற்றல் வளைகோடு இதனை வெளிக்காட்டுகிறது என்ற வினாவுக்கு Graph
representing the learner’s progression with time என்ற பதிலை கற்போரின் வளர்நிலையைக் குறிக்கிறது
என்று மிகக்குழப்பமாக தமிழ் மொழி பெயர்த்துள்ளனர்.கற்றலின் வளர்ச்சியை ஒரு வரைபடமாக
காலத்தைக் கொண்டு விளக்குவது கற்றல் வளைகோடு என்று தமிழ்வழியில் படித்த மாணவர்கள்
இந்த கேள்விக்கு எப்படி விடை அளிக்க முடியும்?
30.அறிவுசார் வளர்ச்சிப் படிநிலைகளில் குறியீட்டு சமன்பாடுகளை புரிந்துகொள்ளும்
நிலை என்ற கேள்விக்கு
A)Sensori-motor stage -புலனியக்க நிலை
B)Concrete-operational
stage -பருப்பொருள் நிலை
C)Pre-operational stage -செயலுக்கு முற்பட்ட நிலை
D)Formal-operational
stage -கருத்தியல் நிலை என்று புத்தகத்திலுள்ளவாறு
மொழிபெயர்த்திருந்தால் எளிமையாக விடை அளித்திருக்க முடியும்.
தமிழ்
ஒன்று முதல் பத்தாம்வகுப்பு புத்தகங்களை படித்தால் போதும் என்று கூறிய
ஆசிரியர் தேர்வுவாரியம் தமிழுக்கான வினாக்களை எந்த புத்தகங்களில் இருந்துதான்
கேட்டார்களோ என்று குழம்பும் அளவுக்கு பத்தாம் வகுப்பு புத்தகங்களை தாண்டி மேல்நிலை
வகுப்புகளில் அதிக அளவு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
58.கோட்டுகிர் குருளை என்றழைக்கப்படுவது என்ற வினாவிற்கு மேல்நிலை முதலாம்
ஆண்டு தமிழ் புத்தகத்தில் பக்கம் 14 இல் ஊன்பொதியவிழாக் கோட்டுகிர்க் குருளை
அதாவது நகங்கள் தசைப்பகுதியிலிருந்து வெளிவராத புலியின் குருளை என்று பொருள் உள்ளது.ஆனால்
எட்டாம் வகுப்பு தமிழ் 63ஆம் பக்கத்தில் இளமைப்பெயர்களில் புலிக்கு புலிப்பறழ், சிங்கத்துக்கு
சிங்கக்குருளை என்று உள்ளது.எனவே சரியான விடை சிங்கம் மற்றும் புலி இரண்டும் ஆகும்.
ஆங்கிலம்
ஆங்கிலத்தில்74வது வினாவான Identify
the correct characteristic என்ற கேள்விக்கு Validity என்று கொடுக்கப்பட்டுள்ளது. Reliability , Validity இரண்டுமே சரியான விடைகள்.
சமூக அறிவியல்
111.சுழற்சி இயக்கங்களிலேயே
மிக எளிமையானது என்ற வினாவுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு புவியியல் புத்தகத்தில் பக்க
எண்:80இல் சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது பாஸ்பரஸ் சுழற்சி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல்
பக்கம்-139 இல்
நீர் சுழற்சி என்பது நீர்
நிலத்திலிருந்து வளிமண்டலத்தை அடைந்து மீண்டும் நிலத்தை அடையும் செயலாகும் என்று
கொடுக்கப்பட்டுள்ளது.
112.வளிமண்டலத்தில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை 5 என்று உள்ளது.ஆனால் ஏழாம்
வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் பக்கம் 105இல் வளிமண்டலத்தினை அதன் பண்புகளின்
அடிப்படையில் நான்கு அடுக்குகளாக பிரிக்கப்படுகிறது.1.அடியடுக்கு(Troposphere) 2.படையடுக்கு(Stratosphere) 3.அயனியடுக்கு(Ionosphere) 4.வெளியடுக்கு(Exosphere) மேலும்,5.சேணிடை அடுக்கு(Tropopause) என்ற மெல்லிய அடுக்கானது அடியடுக்கு மற்றும் படையடுக்கு
இவைகளுக்கிடையே அமைந்துள்ளது. படையடுக்கினை தொடர்ந்து மீண்டும் ஒரு மெல்லிய
அடுக்கு காணப்படுகிறது.இது 6.மீவளி இடையடுக்கு(Stratopause)என அழைக்கப்படுகிறது. ஆகமொத்தம் 6அடுக்குகள் என்பதே மிகச்சரியான விடையாகும்.ஆனால்
மேல்நிலை முதலாம் ஆண்டு பக்க எண்:64 இல் 5 என்று உள்ளது.
128.தொழிலகங்களை இயக்கும்
உயிர்நாடி எனப்படுவது என்ற வினாவுக்கு எரிசக்தி என விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால்
பொருளியலில் மனிதனால் உருவாக்கப்படாத அனைத்து பொருட்களும் நிலம்
என்றழைக்கப்படுகிறது.நிலம் தானாக எதையும் உற்பத்தி செய்ய முடியாது.மனிதன்
நிலத்தில் உழைத்து பண்டங்களையும்,பணிகளையும் உற்பத்தி செய்கிறான். “Labour is
the active and initial force and labour is therefore the employer of capital” ஏழாம் வகுப்பு சமூக அறிவியல்
பக்கம்:181
தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள்,பணியாளர்கள்,எரிபொருள்,மூலதனம்,
போக்குவரத்து,சந்தை அனைத்துமே உயிர்நாடிதான்.அப்படியிருக்க எரிசக்தி மட்டுமே
தொழிலகங்களை இயக்கும் உயிர்நாடி என்று எப்படிக்கூற முடியும்? எட்டாம் வகுப்பு சமூக
அறிவியல் பக்கம்:130
ஆனால் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பக்க எண்:75 இல் எரிசக்தி என்று உள்ளது
113.ஒரு சூழலில் உள்ள
நீரோட்டங்கள் என்ற வினாவுக்கு நான்கு என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏழாம் வகுப்பு சமூக
அறிவியல் புத்தகத்தில் பக்க எண்:141இல் பேராழிநீரோட்டங்கள் இரண்டு
வகைப்படும்.அவைகள் வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் ஆகும் என்று உள்ளது.
மேல்நிலை முதலாம்
ஆண்டு புவியியல் புத்தகத்தில் பக்க எண்:50இல்
மூன்று பெருங்கடல்களுக்கும் கண்டங்கள் எல்லைகளாக அமைந்திருக்கின்றன.இவை
நீரோட்டங்களின் பாதைகளில் தடைகளாக அமைவது மட்டுமன்றி அந்நீரோட்டங்கள் ஏறக்குறைய
வட்ட வடிவில் சுழலவும் காரணமாக அமைகின்றன.இத்தகைய சுழல்தோற்றங்களை பெருங்கடல்
சுழல்கள்(OCEAN GYRES) என அழைக்கிறோம்.மேலும் ஒரு
சுழலில் நான்கு நீரோட்டங்கள் அமைந்துள்ளன.என்று உள்ளது.
பெருங்கடல் சுழலில் உள்ள நீரோட்டங்கள் என்று கேட்பதற்கு பதிலாக ஒரு சூழலில்
உள்ள நீரோட்டங்கள் என்று தவறாக வினா கேட்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக