பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

5/08/2013

வாழ்த்துகிறோம்



நாளை  ( 9.5.13 ) நடைபெறும் பதவி ஏற்பு விழாவிற்கு அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.

கோரிக்கைகள் வென்றெடுக்க வாழ்த்துகிறோம்

கல்வி மானிய கோரிக்கையில் நமது கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டி முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களை நமது மாநிலப் பொறுப்பாளர்கள் நாளை (9.5.13) சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

அரசானை 216ன் படி விபரம் கோருதல்

IGNOU B.Ed. Prospectus for the January 2014 Admission


APPLICATION FEE RS.1000
COURSE FEE RS.20000
LAST DATE 15.07.2013
ENTRANCE DATE : 18.18.2013

CLICK HERE FOR IGNOU B.Ed. Prospectus for the January 2014 session

01.01.2011 ஆம் ஆண்டு தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்று உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களாக தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு பெற்றோர்க்கு 10858 முதல் 11395 வரை பணி வரண் முறை செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

பதவி உயர்வு பட்டியல் 2013

சிங்கம்புணரியில் ஆட்டம் காணும் அரசு குடியிருப்புகள்

சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அரசு குடியிருப்புகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.
சிங்கம்புணரி அரசு பள்ளி அருகே அரசு அலுவ லர் குடியிருப்புகள் உள்ளன.  1967ல் கட்டப்பட்ட இக்குடியிருப்பில் ‘சி’, ‘பி’ பிளாக் கில் மொத்தம் 40 வீடுகள் உள்ளன. ஆசிரியர்கள், பிற துறை அரசு அலுவலர்கள் இங்கு குடியிருந்து வருகின்றனர். ராமநாதபுரம் வீட்டுவசதி வாரியத்திற்குட்பட்ட இக்குடியிருப்பு கள் கட்டப்பட்டு 45 ஆண்டுகளாகி யும் இதுவரை பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் உள்ளன. வாடகை குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் சேதமடைந்த கட்டிடம் என எண்ணாமல் அரசு அலுவலர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
வீட்டின் மேற்கூரைகள், படிக்கட்டுகள் அனைத்தும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சிதிலமடைந்த மேற்கூரைகள் வீட்டில் வசிப்பவர்கள் மீது விழுந்து காயங்களை ஏற்படுத்துகின்றன.  மழைக்காலங்களில் வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது. இதனால் பூச்சி கள், பாம்புகள் கூட சமயத்தில் வந்து விடுவதாக வசிப்பவர்கள் கூறுகின்ற னர். எனவே குடியிருப்பு பகுதியை முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து
 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முத்துபாண்டியன் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, புதூர் ஒன்றியங்களை மட்டும் வகைப் படுத்தப்பட்ட வீட்டு வாடகை பட்டியலில் சேர்க்காததால் குறைந்த வாடகைப்படி வழங்கப்படுகிறது. இங்கு ‘பி’ பிரிவில் குடியிருப்பவர்களுக்கு 3 சதவீதமும், ‘சி’ பிரிவில் குடியிருப்பவர்களுக்கு 2 சதவீதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் குறைந்த வாடகையில் சேதமடைந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.  சிங்கம்புணரியில் உள்ள அரசு அலுவலர்கள் குடியிருப்புகள் அனைத்தும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடங்களை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை வீட்டுவசதி வாரியத்திற்கு புகார் அனுப்பியுள்ளோ£ம்.  2 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் வீட்டுவசதி வாரியத்திலிருந்து ஒரு குழு வீடுகளை பார்வையிட்டது. பின்னர் அனைத்து வீடுகளையும் இடித்து விட்டு 200 புதிய வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறினர். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
 

5/05/2013

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இறப்பு / இயலாமையால் ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை பெற தற்காலிகமாக அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவு


          புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ நமோ நாராயன் மீனா அவர்கள் அளித்த பதில் உரையில், ஏற்கெனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய விதிகளின் படியே புதிய பங்களிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்களில் இறப்பு / இயலாமை ஆகிய காரணங்களால் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறும் ஊழியர் / ஊழியர் குடும்பங்களுக்கு பணிக்கொடை தற்காலிகமாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், ஓய்வூதியத்தில் மட்டும் தான் மாற்றம் கொண்டுவரப்பட்டதே தவிர பணிக்கொடை மற்றும் ஏனைய பலன்களில் எவ்வித மாற்றமும் மத்திய அரசு செய்யவில்லை என்று நேற்று மக்களவையில் தெரிவித்தார். இது குறித்த மத்திய அரசு சுற்றறிக்கை எண்.38/41/06-P & PW(A) நாள்.5.5.2009 அன்றைய தேதியில் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். 
 
 
ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை பெற  குறைந்தபட்சம் 5 வருடம் அரசு பணியில் பணிபுரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கொடையானது ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு 1/2(சம்பளம்)வீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மொத்த ஊதியத்தில் 16-1/2மடங்கு(கடைசியாக பெற்ற ஊதியம்) அல்லது ரூ.10 லட்சம், இவற்றில் எது குறைவோ அந்த தொகை ஓய்வோ பெறுபவருக்கு வழங்கப்படும். பணியின் போது ஒரு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்திற்கு கீழ்கண்ட கணக்கின் படி பணிக்கொடை வழங்கப்படும்.
:
Sl. No.
Length of Qualifying Service
Rate of Death Gratuity
1.Less than one year2 times of emoluments
2.One year or more but less than 5 years6 times of emoluments
3.5 years or more but less than 20 years12 times of emoluments
4.20 years or moreHalf of emoluments for every completed
six monthly period of qualifying service
subject to a maximum of 33 times of emoluments.
Maximum amount of Death Gratuity admissible is Rs, 10 lakh with effect from 1.1.2006.  

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

 
               ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாமல் 32 பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்தது.
விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரத்தைச்சேர்ந்த ஜெயசாந்தி உள்ளிட்ட 32 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இந்த உத்தரவை பிறப்பித்தார். பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு 2010 ஏப். 1-இல் கொண்டு வந்தது.
அதற்கு முன்பே எங்களை ஆசிரியர்களாக பணிகளில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்பதல் அளித்தனர். இருப்பினும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால், எங்கள் பணி நியமனத்துக்கான ஒப்புதலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஏற்க மறுத்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாத நிலை ஏற்பட்டால், ஓராண்டு காலத்தில் மத்திய அரசை, மாநில அரசு அணுகி தகுதியில் இருந்து விதிவிலக்கு பெறவேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு கோரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி டி. ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:

மத்திய அரசின் சட்ட விதிப்படி படி, ஆசிரியர்களை பணியில் நியமிக்கமுடியாத நிலை ஏற்பட்டால், மாநில அரசு அதற்கான காலக்கெடுவுக்குள் விதிவிலக்கு கோரி விண்ணப்பித்து இருக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் இல்லாத நிலை ஏற்பட்ட போதும் அரசு அதற்காக மத்திய அரசை அணுகவில்லை. இந்தச் சூழ்நிலையில்  32 மனுதாரர்களையும் ஆசிரியர்களாக பணியில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததில் தவறு காணமுடியவில்லை. எனவே, 32 பேருக்கும் அதிகாரிகள் தாற்காலிக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அதற்கான ஊதியம் பெறுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இந்த 32 பேரும் 2015 மார்ச் 31-க்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களை நீக்கம் செய்து தகுதியானவர்களை நியமிக்கலாம். மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு அவ்வப்போது தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை ஜூன் 6-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.