சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அரசு குடியிருப்புகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.
சிங்கம்புணரி அரசு பள்ளி அருகே அரசு அலுவ லர் குடியிருப்புகள் உள்ளன. 1967ல் கட்டப்பட்ட இக்குடியிருப்பில் ‘சி’, ‘பி’ பிளாக் கில் மொத்தம் 40 வீடுகள் உள்ளன. ஆசிரியர்கள், பிற துறை அரசு அலுவலர்கள் இங்கு குடியிருந்து வருகின்றனர். ராமநாதபுரம் வீட்டுவசதி வாரியத்திற்குட்பட்ட இக்குடியிருப்பு கள் கட்டப்பட்டு 45 ஆண்டுகளாகி யும் இதுவரை பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் உள்ளன. வாடகை குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் சேதமடைந்த கட்டிடம் என எண்ணாமல் அரசு அலுவலர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
வீட்டின் மேற்கூரைகள், படிக்கட்டுகள் அனைத்தும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சிதிலமடைந்த மேற்கூரைகள் வீட்டில் வசிப்பவர்கள் மீது விழுந்து காயங்களை ஏற்படுத்துகின்றன. மழைக்காலங்களில் வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது. இதனால் பூச்சி கள், பாம்புகள் கூட சமயத்தில் வந்து விடுவதாக வசிப்பவர்கள் கூறுகின்ற னர். எனவே குடியிருப்பு பகுதியை முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முத்துபாண்டியன் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, புதூர் ஒன்றியங்களை மட்டும் வகைப் படுத்தப்பட்ட வீட்டு வாடகை பட்டியலில் சேர்க்காததால் குறைந்த வாடகைப்படி வழங்கப்படுகிறது. இங்கு ‘பி’ பிரிவில் குடியிருப்பவர்களுக்கு 3 சதவீதமும், ‘சி’ பிரிவில் குடியிருப்பவர்களுக்கு 2 சதவீதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் குறைந்த வாடகையில் சேதமடைந்த வீட்டில் வசித்து வருகின்றனர். சிங்கம்புணரியில் உள்ள அரசு அலுவலர்கள் குடியிருப்புகள் அனைத்தும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடங்களை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை வீட்டுவசதி வாரியத்திற்கு புகார் அனுப்பியுள்ளோ£ம். 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் வீட்டுவசதி வாரியத்திலிருந்து ஒரு குழு வீடுகளை பார்வையிட்டது. பின்னர் அனைத்து வீடுகளையும் இடித்து விட்டு 200 புதிய வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறினர். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக