ஆசிரியர் தகுதித் தேர்வை முன்னிட்டு, வரும் 17, 18
தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வை இந்த முறை 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதுகிறார்கள். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு 17(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு 18 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் நடக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வசதியாக, சனியன்று தமிழகம் முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 31-ம் தேதி பள்ளிகள் இயங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக