காரைக்குடி, : ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, 30 நிமிடம் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) இயக்குநர் வசந்தராதேவி தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வு மையத்தின் தலைமை, கூடுதல் தலைமை கண்காணிப்பாளர், துறை அலுவலர் மற்றும் கூடுதல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன் வரவேற்றார்.
ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய இயக்குநர் வசந்தராதேவி தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:
ஆசிரியர் தகுதி தேர்வுகள் வருகிற 17, 18ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. 17ம் தேதி முதல் தாளும், 18ம் தேதி 2ம் தாளுக்கான தேர்வும் நடைபெறும். முதல் தாள் தேர்வு 12 சென்டர்களில் நடைபெறும். இதில் 4,445 பேர் தேர்வு எழுதுகின்றனர். 2ம் தாள் தேர்வு 20 சென்டர்களில் நடைபெறும். இதில் 6999 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதில் 20 பேருக்கு ஒரு உதவி கண்காணிப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு எழுதுபவர்கள் காலை 9.30 மணிக்கே தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும். 10.15 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள், கட்டாயம் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 3 மணி நேரம் தேர்வு நடக்கும். கண்பார்வை அற்றவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்படும். இவர்கள் தேர்வு எழுத உதவியாக ஒரு இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவார்.
கார்பன் சீட்டுடன் தேர்வு பேப்பர் வழங்கப்படும். நகல் தாளை தேர்வர்கள் எடுத்துச் செல்லலாம். தேர்வர்கள் தேர்வு எழுதும் முன்பு கேள்வித்தாளில் அனைத்து பக்கங்களும் சரியாக உள்ளதா என பார்க்க வேண்டும். சேதமடைந்த கேள்வி தாள்களை தனியாக வைக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் விடை தாள்களை தனியாக பார்சல் செய்ய வேண்டும்Õ என்றார்.
இணை இயக்குநர் (இடைநிலை கல்வி) ராஜராஜேஸ்வரி, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்ளிட¢டோர் கலந்துகொண்டனர். அழகப்பா பள்ளி முதல்வர் ஆனந்தி தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக