வருகிற 18ந் தேதி ஒனறுபட்ட போராட்டத்திற்கு திட்டமிட அனைத்த சங்கங்களுக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அழைப்பு விடுத்திருக்கிறது. பிறக்கும்பொழுதே தன்னுடைய தொப்புள் கொடியை அறுத்துக்கொண்டு போராட்டத்தில் குதித்த இயக்கம் இந்த சரித்திரம் வாய்ந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை இடைநிலை ஆசிரியர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். கோரிக்கைகள் வென்றெடுத்த பின்பு அவ்வெற்றிக்கு உரிமை கோருவதை விட்டவிட்டு ஆசிரியர்களின் நலன் கருதி அனைத்து சங்க பொறுப்பாளர்களும் ஒன்று கூடி உரக்க குரல் கொடுப்போம். போராட்டங்கள் விளையாட்டல்ல! கோரிக்கைகள் கேளிக்கையல்ல!! என்பதை அரசாங்கம் நன்கு அறிந்ததுதான். ஆளும் கட்சி கூட தன்னுடைய உரிமையை மத்திய அரசிடம் போராடிதான் பெற்று வருகிறது. தமிழக முதல்வர் தன்னுடைய பலமான போராட்டத்தால்தான் இந்த மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஆனார். ஜனநாயக நாட்டில் போராடாமல் எதுவும் கிடைத்ததாக வரலாறு இல்லை. நம் முன்னோர்கள் நம்க்காக போராடி பெற்ற உரிமைகளை இன்று இழந்து நிற்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை. மற்ற இயக்கங்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கின்றோம். நாம் தனித்து நின்று போராடுவது என்பது இன்றைய சூழ்நிலையில் சரியான முடிவாக இருக்காது. எனவே இயக்க உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்துள்ள இயக்க தலைமையை கூட்டுப்போராட்டத்திற்கு வலியுறுத்துங்கள். நம்மால் முடியாதது எதுவும் இல்லை. நமக்கான பாதையை நாம்தான் வகுக்க வேண்டும்.
ஒன்றுபட்ட போராட்டம்! ஒன்றே நம் துயரோட்டும்!!
ஒன்றுபட்ட போராட்டம்! ஒன்றே நம் துயரோட்டும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக