தமிழ்நாட்டு ஆசிரியர் சங்கங்களில் வலுவானதும் வலிமையானதும் ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய ஆசிரியர் சங்கங்கள்தான். தற்பொழுது 6வது ஊதியக்குழுவில் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்து இருப்பவனும் இடைநிலை ஆசிரியர்தான். அனைத்து சங்கங்களும் தனிச்சங்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அரசாங்கம் இந்த விசயத்தை பற்றி யோசிக்க தொடங்கியிருப்பதாக வந்துள்ள செய்தி ஒரளவு ஆறுதல் அளித்தாலும் சங்கங்கள் தங்களிடம் உள்ள காழ்புணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்ட ஒன்றுபட்ட போராட்டங்களை அறிவித்தால் நிச்சயம் அரசாங்கத்தின் பார்வையை நம் பக்கம் திருப்பலாம். கடுமையான போராட்டங்கள் இல்லாமல் தீர்வு என்பது எட்டாக்கனியாகி விடும். பல ஆசிரியர்கள் மனக்குமுரல்களை நம்மிடம் தொடர்ந்து கொட்டி வருவதை சங்க தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது. எத்தனையோ போராட்ட வடுக்களை தாங்கிய தலைவர்களை பெற்றுள்ள இயக்கங்கள் இதற்கான முன் வடிவை எடுக்க வேண்டும். கடந்த கால ஒன்றுபட்ட போராட்டங்களில் நடந்தது போல் அல்லாமல் களத்தில் சூடு குறையாமல் கடைசி வரை போர்குணமிக்க வீரர்களாய் களம் காண்போம். வெற்றி கிட்டும் வரை போராடுவோம். இறுதி வெற்றி நமதே என்ற இலட்சிய வாசகத்தை மனதில் தாங்கி களம் காண எத்தனையோ இலட்சம் ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். இயக்கத்தலைவர்களே ஒன்றுபடுங்கள். ஒன்று திரட்டுங்கள். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சணை தீராமல் இனி தமிழ்நாட்டில் இயக்கம் நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அழுகிற குழந்தைதான் பால் குடிக்கும். நாம் சேர்ந்து அழுவோம். நம் அழுகுரல் ஆட்சியாளர்களின் செவிப்பறையை தட்டட்டும். தொடர்ந்து ஏமாறுவதற்கு இடைநிலையாசிரியர்கள் ஒன்றும் புரியாதவர்கள் அல்ல. நமது ஒன்றுபட்ட சக்தி என்பது நிச்சயம் நம் துயரோட்டும்.
மத்திய மாநில அரசுகளோ தாராளமயம். தனியார்மயம், உலகமயம் அகியவற்றின் தாக்குதல்களால் நிலைதடுமாறிப் போயிருக்கின்ற – போராட்ட உணர்வு மழுங்கிப் போய் நிற்கின்ற மக்கள் விழித்தெழமாட்டர்கள் எனக்கனவு காண்கிறது.
மரம் சும்மா இருந்தாலும் கற்று அதைச் சும்மா இருக்கவிடாது.
ஒய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல: தியானம்.
பின் வாங்கல் அல்ல பதுங்கல்
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்’
(நன்றி: கவிதை : பசுவய்யா) .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக