தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உன் உரிமை மீட்பிற்காக வருகிற 30.8.2013 அன்று நடத்தவிருக்கும் மாபெரும் மறியல் போருக்கு உன் வரிப்புலி கூட்டத்தை திரட்டி விட்டாயா?. திட்டமிட்ட செயல் கெட்டுப்போனதாக வரலாறு இல்லை. தமது திட்டம் நாளைய வெற்றியின் படிக்கல். மறந்த போன நினைவுகளை! மழுங்கி போன உணர்வுகளை!! தட்டி எழுப்பி தன்மானமுள்ள தியாக வேங்கையாக போருக்கு புறப்பட தயாராகயிரு. உனது வெற்றி முரசு சத்தம் சக ஆசிரிய சகோதரனை தட்டி எழுப்பும் சங்கொலியாக அமையட்டும். உனக்கு இந்த ஒரு மாத காலத்தில் 10க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். அனைத்தையும் உன் சக ஆசிரியனிடம் பகிர்ந்தாயா?. அடடா! எத்தனை விமர்சனங்கள். அந்த விமர்சனங்கள்தான் என்னை கூர் தீட்டின. இன்று பெறவில்லையென்றால் என்று பெறப்போகிறோம்? நீண்ட இரயில் பயணத்தில் பயணிகளை பத்திரமாக சேருமிடம் சேர்க்கும் தொடர் வண்டி போல் தமிழக ஆசிரியர்களை பாதிப்புக்களின்றி பயணிக்க செய்கின்ற தொடர் வண்டிதான் டி.என.பி.டி.எப். ஆகஸ்டு புரட்சி இந்திய வரலாற்றில் இன்றளவும் பேசப்படுகிறது. அதை போலத்தான் நமது ஆகஸ்ட் மறியல் இயக்க வரலற்றில் பேசப்படும். ஆள்பவர்களுக்கும், ஆண்டு முடித்தவர்களுக்கும் சேதாரம் இல்லாமல் போரடுவது போல் பாசாங்கு செய்ய தெரியாது நமக்கு. நெஞ்சில் மூண்ட நெருப்புக்கு சமரசம் ஏதுமில்லை என்ற இலட்சிய வேட்கையை நெஞ்சில் ஏந்தி வெற்றி கிட்டும் வரை போராட மட்டுமே நமக்கு தெரியும். தங்கம் செய்யாததை தங்கம் செய்யும் என்பதில் உறுதியுள்ளவன் நான். ஆகத்து-30 இலட்சியவாதிகள் சங்கமிக்கும் நாள். ஆளும் அரசின் மனதை மாற்றப்போகும் நாள். மற்றவர்கள் துணிந்து செய்யாததை துணிச்சலுடன் எதிர்கொள்வதே எமது இயக்கத்தின் வழக்கம். இது நமக்கான பாதிப்பு. நாம் திரட்டவில்லையென்றால் யாரால் இயலும்? நாம் திரட்டுகின்ற கூட்டம் எதிர் கால ஆசிரிய சமுதாயத்தின் இயல்பு வாழ்க்கைக்கு இடக்கூடிய அடி உரம். கூட்டு போராட்டம் சாத்தியப்படவில்லையா? என்ற வினாவினை பலர் தொடுத்து வருகிறீர்கள். அதற்கான முயற்சியை நமது தலைமை செவ்வனே செய்து வருகிறது. நாம் தலைமையேற்கவும் தயார் அல்லது மற்ற தலைமையோடு கூட்டுச்சேர்ந்து களம் காணவும் தயார் என்பதே நமது தலைமையின் நிலை. எனவே இயக்கம் இட்ட கட்டளையை நிறைவேற்ற பல போராட்ட களம் கண்ட தியாக வேங்கைகளே திரட்டு உன் படைகளை. நம் பலம் என்ன என்பதை மற்றவர்களுக்கு புரியவைப்போம். போராட்ட களம் ஒன்றும் நமக்கு புதிதல்ல. புரட்சிகரமான கோஷங்களால் புது வரலாறு படைப்போம். குள்ள நரி கூட்டங்களை நம் கூட்டம் கூண்டோடு விரட்டட்டும். நம்மை எள்ளி நகையாடுபவர்கள் நடுங்கி ஓடட்டும். நல்லவர்கள் கூட்டம் நம்மோடு இணையட்டும். களத்தை சூடுபடுத்தி இலட்சிய வேட்கையுடன் மறியல் செய்ய அழைத்து வா! உன் வரவை ஆவலுட்ன எதிர்பார்க்கிறேன். இரண்டு அம்ச கோரிக்கை வெல்வதற்குத்தான் நமது மாநில முதல்வர் கூட இரண்டு விரல் காட்டகிறார் போல்? நேரம் இரவு 12 ஆகிவிட்டது நாளை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாரத்திற்கும் சுற்று பயணம் திட்டமிட்டுள்ளோம். வட்டார நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்த நாளை நேரில் உன்னை நோக்கி எமது பயணம். தோழனே வாழ்வாதாரத்ததை மீட்டெடுக்க உன் வரி-புலி கூட்டத்தை திரட்டிடுக. வெற்றி நமதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக