தமிழ்நாட்டடில் பணிபுரியும் அரசு ஊழியர் - ஆசிரியர்களில் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் ஆட்சியாளர்களின் மாற்றந்தாய் மகனாக மாற்றப்பட்டதன் மர்மம் என்ன? எங்களை ஆட்சியாளர்களின் மனத்திறையிலிருந்து பிரித்த கயவர்கள் யார்? ஒரே பணி நிலை - ஒரே கல்வி நிலை - மாறுபட்ட ஊதியம் ஏன்? விளக்கினார்களா? முதல்வருக்கு. இல்லை முதல்வர்தான் விளக்கம் கேட்டாரா? என்ன நடக்கிறது இங்கே? ஒரு ஜனநாயக நாட்டில் இதைவிட அறவழியில் எவ்வர்று நம் உரிமையை கேட்பது. கேட்பது உரிமை என்று தெரிந்தும் அரசு ஊமையாய் இருப்பது ஏன்? புலனாய்வு அதிகாரிகள் முதல்வருக்கு அனுப்பிய அறிக்கையில் 40000 இடைநிலை ஆசிரியர்களின் அவல நிலையை உணர்த்தவில்லையா? இல்லை முதல்வர் உணர விரும்பவில்லையா? ஒரு தாய் தன் பிள்ளைகளின் பசியறிந்து உணவளிக்க வேண்டாமா? பிள்ளை அழுது புலம்பி நா வற்றியும் கூட வரம் தர வில்லையென்றால் என்ன செய்வது? சுயநலமிக்க சில தலைவர்களின் தான்தோன்றிதனமான முடிவுகளால் தரம் தாழந்து போன எங்களின் வாழ்வை மீட்டெடுப்பது எப்போது? அருமை தோழர்களே தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்தின் மாநிலத் தலைமையின் அலை பேசியை தொடர்ந்து அலையுங்கள். கூட்டுப்போராட்டம் நடத்துவதற்கு நெருக்குதல் கொடுங்கள். டிட்டோ-ஜேக் கூட்டம் ஏன் கூட்ட மறுக்கிறீர்கள் என்று வினா தொடுங்கள். வர மறுக்கும் தலைமைகளை இயக்க நடவடிக்கைகளிலிருந்து அப்புறப்படுத்துங்கள். நம்மை வைத்து சுக போக வாழ்க்கை வாழும் அவர்களின் முகத்திரையை கிழித்தெறியுங்கள். யோசிக்க நேரமில்லை. சிந்தித்து சிந்தித்து செயலற்று போய்விட்டோம்? உள்ளே நடக்கும் திரை மறைவு வேலைகளை நம்மிடம் மறைத்து தவறான வரலாற்றை நம் மனதில் பதியவைத்து நம்மை அடி முட்டாளாக ஆக்குவதை அம்பலப்படுத்துங்கள். கேள்வி கேட்க முடியாத உயரத்தில் இருக்கும் தலைமை நமக்கு வேண்டாம. நம்மை உறுப்பினாரக கொண்டுள்ள இயக்கத்தில் கேள்வி தொடுக்க முழு உரிமை நமக்கு உண்டு என்பதை உணருங்கள். உசுப்புங்கள் உங்கள் தலைமையை. தனிச்சஙக் நடவடிக்கை தவிர்த்து கூட்டு நடவடிக்கைக்கு கூப்பாடு போடுங்கள். உறங்க நேரமின்றி உழைக்க தயாராகுங்கள். உண்மையான போர்களம் எது என்பதை உலகிற்கு புரிய வையுங்கள். உன்னோடு களம் காண ஆவலாக உள்ளேன். உரிமை போரின் சங்கொலி என் காதில் ஒலிக்கத் தொடங்கி விட்டது. போர்! போர்! வீர வேல்! வெற்றி வேல்!!
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!!
தோழமையுடன்...
A.Muthuppandian
TNPTF _ Singampunari
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடி பெறுவோம்!!!!
தோழமையுடன்...
A.Muthuppandian
TNPTF _ Singampunari
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக