இன்று 101ல் பட்டியலிடப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு வராது. பொதுவாக 50க்குள் இருந்தால் நம்பலாம். இல்லையென்றால் வரும் .......ஆனா வராது. என்ற பதில்தான். சில நண்பர்கள் ஏன் வரவில்லை? என்ற என்னை ஆராய்ச்சி செய்ய சொல்கிறார்கள். வழக்கு நீதி மன்றத்திற்கு சென்ற பின்னால் வழக்கின் தன்மை மாறுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதை இங்கு பட்டியலிடமுடியாது. நாம் விசாரித்த அளவில் நாளை(11.9.2013) கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பஞ்சு மிட்டாய் மாதிரி இழுக்கும் இந்த வழக்கு ஒரு புரியாத புதிர்தான். இந்த வழக்கு முடிந்தால்தான் அடுத்துகட்ட பதவி உயர்வோ அல்லது பணி அமர்வோ நடக்கும். பார்க்கலாம் உங்களைப்போலவே நாமும் ஆவலில் உள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக