தமிழக அரசு தொடக்கக்கல்வியை செலுமைப்படுத்தவும், ஆசிரியர்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் களையவும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களையும், அதிக பள்ளிகள் உள்ள ஒன்றியங்களில் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களையும் நியமித்துள்ளது. இரு அலவலர்கள் பணிபுரியும் ஒன்றியங்களில் சம பாதியாக பள்ளிகள் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகிறது. ஆனால் சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் இருவரும் தன்னுடைய பயணச்செலவுகளை மிச்சப்படுத்தும் நோக்கில் பள்ளி பார்வைகளை இரண்டு பேரும் சேர்ந்தே ஒரே பள்ளிக்கு பார்வை மற்றும் ஆய்வுக்குச் செல்கின்றனர். இதனால் தங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளை பார்வையிடுவது பாதிக்கிறது பற்றி இருவரும் கவலைப்படுவதில்லை. ஆனால் அரசிடம் பயணப்படிகளை தனித்தனியாக பெற்றுக்கொள்கின்றனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளை முறையாக ஆய்வு செய்வதை விட்டுவிட்டு அடுத்தவர் நிர்வாகத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து செல்வதால் அரசின் கொள்கை முடிவே கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு அரசு இரண்டு அலுவலர்களை நியமிக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவரையே நியமித்து வேலை வாங்கலாம். இதனால் அரசின் பணம்தான் விரயமாகிறது. இதனால் ஆசியர்களின் பிரச்சணைகள் அலுவலகத்தில் தேங்கியுள்ளன. கடந்த மாதம் உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலவலர்கள் பள்ளி பார்வை மற்றும் ஆய்வுகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் கூட இங்கு பின்பற்றுவதில்லை. எப்பொழுது பார்த்தாலும் இரண்டு ஏ.இ.இ.ஓக்களும் ஜோடி சேர்ந்து சுற்றுவதில் சுகம் காண்கின்றனர். இந்த நடைமுறை அரசின் உத்தரவிற்கு எதிராக உள்ளது. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் இந்த மாதிரி நிகழ்வுகளை உடனடியாக களைய வேண்டும். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அதி மேதாவித் தனத்தில் அரசு விதிகளை காற்றில் பரக்க விடும் இந்த மாதிரி அதிகாரிகளை திரும்பப் பெற வேண்டும். இந்த கூத்துக்கள் தொடருமானால் தினமும் அவர்கள் செய்யும் அடடூளியங்கள் பதிவேற்றப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக