நேயர்களே ! ஆசிரியர்கள் இல்லாமல், அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
ஒன்று, திறவா கதவாகியுள்ளது. மாணவ-மாணவிகள், படிப்பும் பரீட்சையும்
இன்றி, சத்துணவு மட்டும் சாப்பிட்டு வருகின்றனர். இது பற்றிய செய்தித்
தொகுப்பு!…
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி பகுதியில், அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில், பள்ளியில் ஒரு ஆசிரியர் தான் பணியாற்றி வந்தார். பள்ளிக்கு தலைமையாசிரியரும் அவர் தான்.
இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும், பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி, கழிவறையை சுத்தம் செய்து தர வேண்டும் என்று, பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில்,போதிய ஆசிரியர்கள் இல்லாததால், தற்போது பள்ளி திறக்கப்படவில்லை. இந்த மூடல், நிரந்தரமா, அல்லது தற்காலிகமா என்று யாருக்கும் தெரியவில்லை.. பள்ளி திறந்து இருந்தபோதும், அங்கு படித்து வந்த மாணவ-மாணவிகள், பள்ளி வராந்தாவில் புத்தக பைகளை போட்டு விட்டு, விளையாடி முடிந்ததும், சத்துணவு சாப்பிட்டு விட்டு, புத்தக பைகளுடன் வீட்டுக்கு செல்வது தான் வழக்கமாம். இப்போதும் அது தான் நடந்து கொண்டிருக்கிறது.
மாணவ-மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கு வருகிறார்கள். புத்தக பைகளை, மூடி கிடக்கும் பள்ளி வராந்தாவில் வைத்து விட்டு, மனம்போன போக்கில் விளையாடுகிறார்கள்.. பின்னர் ஓய்வாக சத்துணவு சாப்பிட்டு விட்டு, ஹாயாக வீட்டுக்கு செல்கிறார்கள். இந்த படிப்பு பற்றி, அப்பள்ளியின் மாணவ-மாணவிகள் என்ன சொல்கிறார்கள்? அதையும் கேட்போமே…
எப்போது கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்?எப்போது பள்ளி முழுமையாக இயங்கும் என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரிந்த செய்தி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக