என் இனிய அப்பாவி இடைநிலை ஆசிரிய தோழனே!
உன் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக உன்னிடமிருந்து பறிக்கப்படுவதை உணர்ந்தாயா? உன் தரநிலை தர ஊதியத்தால் தரம் கெட்டு போனதை அறிந்தாயா? அறிந்தும் உன்னிடம் எவ்வித சலனமோ, சஞ்சலமோ இருப்பதாக தெரியவில்லை. உன்னால் உனக்கான சரியான இயக்கத்தைக்கூட தெரிவு செய்ய இயலாமல் சிதறிக் கிடக்கிறாய். போராட்ட களத்தில் உன் பங்களிப்பு என்பது சொல்லும் அளவிற்கில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஏன் இந்த தயக்கம். நாம் ஏன் செல்ல வேண்டும்? நமக்காக யாராவது போராடுவார்கள் என்ற அசட்டையா? இல்லை அச்சமா? புரியவில்லை. இந்த நாட்டின் தலைவிதியை நிரணயிக்கப்போகும் மாணவர் சமுதாயம் உன் கையில். உன்னுடைய பிரதிபலிப்பு உன் மாணவர் சமுதாயத்திற்கும் தொடரும் என்பது உனக்கு பரியாததா?. உன் உரிமைகளைக் கூட கேட்க திராணியற்று ஊமையாய் உருக்குலைந்து இருக்கும் உன்னால் எப்படி உன் மாணவர் சமுதாயத்திற்கு உரிமையை பெற கற்றுக்கொடுக்க போகிறாய்?. போராட்டக் களத்தில் மற்றவர்கள் போராடிப் பெறும் உரிமைகளை எவ்வித கூச்சமும் இன்றி எப்படி உன்னால் அனுபவிக்க இயலுகிறது. மீண்டும் பகத்சிங் பிறந்தா உன்னை காப்பற்ற முடியும்?. இல்லை சேகுவரா தோன்ற வேண்டுமா?. உனக்கான பகத்சிங், சே யார் என்று அடையாளம் கண்டுக்கொள். இன்று தவறவிட்டால் இழந்த உரிமைகளை உன்னால் இனிமேல் பெற இயலாது. பல கட்ட போராட்டங்கள் தனித்தும், இணைந்தும் அரங்கேற்றியாகிவிட்டது. அரசோ, அதிகாரிகளோ அசையவில்லை. 30000க்கும் குறைவாக உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு நீக்க முன்வர அரசு தயங்க காரணம் யோசித்தாயா? தொடக்கக்கல்வித் துறையில் உள்ள சங்கங்களின் போராட்டங்களை பார்த்தாலே பயம் கொள்ளும் அரசாங்கம் அமைதி காப்பதன் அர்த்தம் புரிந்தாயா? போராட்ட களத்தில் உன் பங்களிப்பு குறைந்ததன் விளைவே என்பதை நீ அறிவாயா?. அளவு மாற்றம் குணம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை என்றாவது நினைத்ததுண்டா?. போராட்டம் யாருக்கோ என்று வெளியில் நின்று வேடிக்கை பாரப்பது எவ்வளவு கேவலம் என்பது இனிமேலாவது உணர்ந்து கொள். இயக்கங்கள் அறிவிக்கும் போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொள்ள தயாராகு. மற்றவர்களையும் தயார் படுத்து. இடைநிலை ஆசிரியர்களில் இளைஞர்கள் பலம் அதிகமாகிவிட்டது. உன் பலத்தை பலவீனமாக்க சில சுயநலமிக்க தலைவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்கள். அதில் சிக்கி சின்னாபின்னமாகி விடாதே. சிந்தித்து செயல்படு. சிந்தணை செய்யாதவன் ஜெயித்ததாக வரலாறு இல்லை. உனக்காக போராட கூட்டு நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டமிட்டு வருகிறது. கோரிக்கை வென்றெடுப்பதே இலட்சியம். வருகிற போராட்டங்களில் உன் வரவை தோழமையுடன் எதிர்பார்க்கிறேன்.
உணர்வாயா? மற்றவர்க்கும் உணர்த்துவாயா?
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!
உரிமையைப் போராடிப் பெறுவோம்!!!
என்றும் இயக்க பணியில...
முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டத்தலைவர்
Sivagangai

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக