பேரணாம்பட்டு அருகே உள்ள அணங்காநல்லூர் மோட்டூர் நிலையத்தை சேர்ந்த
ஆனந்தன் மகன் நவீன் (வயது 9). பல்லலகுப்பம் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு
படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் பள்ளியில் ஆசிரியர் கலையரசன் மாணவன் நவீனை பிரம்பால் முதுகு மற்றும் உடம்பில் அடித்தார். வீட்டுக்கு சென்ற மாணவன் மயக்கமடைந்தான்.
இதனையடுத்து நவீன் குடியாத்தம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். இதுபற்றி மாணவனின் பெற்றோர் பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அதிகாரி ரங்கநாதன் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவனை பார்வையிட்டார்.
மேலும் சம்பந்தபட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விசாரித்தார். பள்ளிகளில் குழந்தைகளை அடிக்க கூடாது. அன்பு, அரவணைப்பு மூலம் திருத்த வேண்டும். மீறினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் ஆசிரியர் கலையரசன் மீது இளம் சிறார் பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமை சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கலையரசன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக