சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் பணியாற்றும் AEEOக்கள் தங்கள் அலுவலக செலவுகளுக்காக ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் செய்து செலவு செய்கின்றனர். இதை வசூல் செய்து தருவதற்கு ஒன்றியத்தில் பணியாற்றும் தலைமையாசிரியரையே நியமித்திருப்பதுதான் கொடுமையின் உச்சகட்டம். ஆசிரியர்களின் பணப்பலன்களை வாங்கி கொடுப்பதில் காட்டும் முனைப்பைவிட பணம் வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. பணம் தர மறுக்கும் பள்ளிகளுக்கு இரண்டு AEEOக்களும் ஒரு சேர சென்று பள்ளியை பார்வையிட்டு ஆசிரியர்களை மிரட்டுவது தொடர் கதையாக உள்ளது. AEEOக்களை இயக்க ரீதியாக சந்திக்கச் செல்லும் பொறுப்பாளர்கள் உடகாருவதற்கு இருக்கை கொடுப்பதில்லை. மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் முதல் பள்ளிக்கல்விச் செயலர் வரை உள்ள அலுவலகங்களில் வருபவர்களை அமர வைத்து கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கும் பண்பு கல்வித்துறையில் நிலவி வரும் சூழலில் கொஞ்சம் கூட இங்கீதம் தெரியாமல் நடக்கும் இந்தமாதிரி அலுவலர்களால் கல்வித்துறை கேவலப்பட்டு நிற்கிறது. இரமர் என்ற பெயர் கொண்ட கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் கையை ஊயர்த்தி ஒரு 'தாதா' போல் ஆசிரியர்களை மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களாக வந்தால் ஆசிரியர்களின் பிரச்சணைகளை எளிதில் புரிந்து தீர்வு காண்பார்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இயக்கஙகள் போராடி பெற்றுத்தந்த இந்த பதவியினை இன்று பலபேர் தவறாக பயன்படுத்துவதாலும், சரியான புரிதல் இல்லாமல் இருப்பதாலும் பல இடங்களில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் என்ற பணியிடமே பிரச்சணையாக உள்ளது. கல்வித்துறை இந்த மாதிரி அலுவலர்களை கணக்கெடுத்து களையெடுக்க வேண்டும் என்பதே கல்வித்துறையின் மீது ஆர்வம் கொண்டுள்ள பல பேரின் அவா. நிறைவேற்றுமா தொடக்கக்கல்வித்துறை?.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக