மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த சீனிவாசனின் மகன் வெங்கடேஷ் (வயது
17). இவன் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தான்.
அங்கு உள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்தான். சமீபத்தில் நடந்த தேர்வில்
மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவனை அவனது
தந்தை சத்தம் போட்டார்.
இன்று காலை 5 மணிக்கு மாணவர்கள் அனைவரும் படித்து கொண்டு இருந்தனர். அப்போது படிக்க வந்த மாணவன் வெங்கடேஷ் கழிவறை சென்று வருவதாக கூறி விட்டு சென்றான். திரும்ப வரவில்லை.
சசிக்குமார் என்ற இன்னொரு மாணவன் விடுதி அறைக்கு சென்ற போது அங்கு கயிறு அறுந்து விழுந்து மாணவன் வெங்கடேஷ் இறந்து கிடந்தான். அதாவது மாணவன் வெங்கடேஷ் கயிறால் தூக்கு போட்டு உள்ளான். அப்போது கயிறு கழுத்தில் இறுக்கியும், அந்த கயிறு அறுந்து விழுந்தும் இறந்துவிட்டான்.
அவன் இறந்து கிடப்பதை பார்த்த மாணவன் சசிக்குமார் மயங்கி விழுந்து விட்டான். அவன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்த மாணவனின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நாமக்கல் விரைந்து உள்ளனர்.
மாணவனது பிணம் தற்போது பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக