பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

2/07/2014

13ம் தேதி தமிழக பட்ஜெட்: பள்ளிக்கல்விக்கு 19,000 கோடி?

தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை கருதி பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள், சலுகைகள் வெளியாகலாம் என்று தெரிகிறது. 2014ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற் றது. அப்போது கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். இதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பேரவை கூட்டம் கடந்த 3ம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில், சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.  தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற 13ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை சட்டமன்ற பேரவை தலைவர் கூட்டியுள்ளார். அன்று காலை 10 மணிக்கு 2014-2015ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) பேரவைக்கு அளிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார். அன்றைய தினம் பேரவையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுவார். பட்ஜெட் உரையை அமைச்சர் படித்து முடித்ததும், பேரவை நிகழ்ச்சி அத்துடன் ஒத்திவைக்கப்படும்.

இதையடுத்து, பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், பேரவைத்த லைவர் தனபால் தலைமையில் நடக்கும். அதில், பட்ஜெட் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும். பட்ஜெட் மீதான விவாதம் வருகிற 17ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது. விவாதத்துக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் பதில் அளிப்பார். இதைத்தொடர்ந்து, பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். வழக்கமாக பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்படும். மானிய கோரிக்கை கூட்டம் வழக்கமாக ஒரு மாதம் நடைபெறும். 

ஆனால் இந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 21ம் தேதிக்கு பிறகு எந்த நிமிடமும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இப்படி தேர்தல் அறிவித்தால், புதிய அறிவிப்புகள் எதையும் அரசு சார்பில் வெளியிட முடியாது. மேலும், தேர்தல் அறிவித்த பிறகு மார்ச் முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பணியாற்ற அனைத்து அரசியல் கட்சியினரும் தயாராகி விடுவார்கள். இதனால் வழக்கமான பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், தொடர்ந்து நடைபெறும் மானிய கோரிக்கை கூட்டம் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஜூன் அல்லது ஜூலை மாதம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக அரசு 13ம் தேதி தாக்கல் செய்ய உள்ள 2014-2015ம் ஆண்டு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், வழக்கம்போல் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். நிதி பற்றாக்குறையை சமாளிக்க ஆடம்பர பொருட்களுக்கு கூடுதல் வரியும், சமையல் பொருட்களுக்கு வரி குறைப்பும் செய்யப்படலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு (2013-2014) தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 21ம் தேதி தொடங்கி மே மாதம் 16ம் தேதி வரை 34 நாட்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக