"லேப்டாப்'
திருடுபோன, பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு வழங்கும் வரை, "லோப்டாப்'களை தலைமைஆசிரியர்கள் தங்கள்
பொறுப்பில் பாதுகாக்க வேண்டும். பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த
"லேப்டாப்'கள் பல இடங்களில் திருடுபோனது. இதையடுத்து, "லேப்டாப்'களை
பாதுகாக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், காவலர்களை நியமிக்கவும்,
அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவிக்கவும் கல்வித்துறை
உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை பெரும்பாலான தலைமைஆசிரியர்கள்
கடைபிடிக்கவில்லை. இந்நிலையில், "லேப்டாப்' திருடு போனால், சம்பந்தப்பட்ட
பள்ளி தலைமைஆசிரியர்கள், அதற்குரிய பணத்தை அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.
பணத்தை செலுத்தாத தலைமைஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க
வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, "லேப்டாப்' திருடுபோன பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பட்டியலை
கல்வித்துறை தயாரித்து வருகிறது. இதனால், சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள்
கலக்கம் அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக