பள்ளி பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்கி 20ம் தேதி வரை 66 மையங்களில் நடக்க உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால் இரு தேர்வுகளிலும், தேர்ச்சி 90 சதவீதத்தை தாண்டும் என கல்வித்துறை எதிர்பார்க்கிறது.
கடந்த இரு ஆண்டுகளாக, தேர்ச்சி சதவீதம் கணிசமாக எகிறி வருகிறது. 2012ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி 86.2 சதவீதமாக இருந்தது; இது 2013ல் 89 சதவீதமாக உயர்ந்தது. பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 2012ல் 86.7 சதவீதமாகவும், 2013ல் 88.01 சதவீதமாகவும் உயர்ந்தது. பிளஸ் 2 தேர்வை விட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக