எல்.கே.ஜி. பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடங்களை நீக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலக் கல்வி வாரியத்தின் ஒப்புதல் பெறாத பாடப் புத்தகங்களை பயன்படுத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எல்.கே.ஜி. வகுப்பில் 2-வது பருவத்துக்குரிய ‘உட்பெக்கர்ஸ் லிட்டில் நெஸ்ட்’ பாடப் புத்கத்தில் 11, 94-ம் பக்கங்களில் சர்ச்சைக்குரிய பாடங்கள் இடம்பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
சென்னையைச் சேர்ந்த உட்பெக்கர் பதிப்பகம் வெளியிட்டிருந்த இந்த புத்தகம், தமிழக அரசின் கல்வி ஆணையமான மாநில பள்ளிக்கல்வி பொது வாரியத்தின் ஒப்புதல் பெறப்படாமல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய 11, 94-ம் பக்கங்களை நீக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில பள்ளிக்கல்வி பொது வாரியத்தின் ஒப்புதல் பெறப்படாத பாடப் புத்தகங்களை பயன்படுத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக