ஏப்ரல் 28-ம் தேதி நடக்கவிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, மக்களவைத் தேர்தல் காரணமாக அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு அரசு சார்பில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மார்ச் முதல் வாரத்தில் தொடங்கிய பயிற்சி வகுப்புகள் வரும் 15-ம் தேதி முடிகின்றன.
இதற்கிடையே, ஏப்ரல் 28-ம் தேதி நடத்தவிருந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, மக்களவைத் தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மே இறுதியில் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக